Saturday, February 05, 2011
அருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன?
அருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன?
Friday, September 17, 2010
உயிர்மை பதிப்பகம்
ஷாஜியின் இசையின் தனிமை நூல்
கலந்துரையாடல் அரங்கம்
நாள் : 2010 செப்டம்பர் 18, சனிக்கிழமை, மாலை 6 மணி
இடம் : தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கம் (Film Champer)
604, டி.ஆர்.சுந்தரம் அவென்யூ, ராணி சீதை மன்றம் அருகில்அண்ணா சாலை, சென்னை- 600 006
வரவேற்புரை : மனுஷ்ய புத்திரன்
கௌரவ விருந்தினர்கள்பாடகர் மலேசிய வாசுதேவன்
திரை இசை வயலின் மேதை ராம சுப்பு
சிறப்பு விருந்தினர்கள்
இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் பாலா
மதிப்புரை
பிரபஞ்சன்,
ஜெயமோகன்,
எஸ்.ராமகிருஷ்ணன்
ஏற்புரை
ஷாஜி
Friday, April 30, 2010
சுஜாதா விருதுகள் 2010 விழா மே 3
உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும்
சுஜாதா விருதுகள் 2010
விருது வழங்கும் விழா
காலத்தை வென்ற கலைஞனின் நினைவாக 6மதிப்பு வாய்ந்த விருதுகள்
நாள்: 3.5.2010 திங்கட்கிழமை நேரம்: மாலை 6மணி
இடம்: தேவநேய பாவணர் மாவட்ட நூலகம் ( LLA Building) 735, அண்ணா சாலை, சென்னை-600 002
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்
வாழ்த்துரை : இந்திரா பார்த்தசாரதி
ஞானக்கூத்தன்
பேராசிரியர் கு. ஞானசம்பந்தம்
பாலு மகேந்திரா
சாரு நிவேதிதா
வாஸந்தி
தமிழச்சி தங்கபாண்டியன்
ஏ.நடராஜன், முன்னாள் இயக்குனர் தூர்தஷன்
திரைக்கலைஞர்.ரா. பார்த்திபன்
நன்றியுரை: திருமதி சுஜாதா ரங்கராஜன்
சுஜாதா விருதுகள் 2010
1. சுஜாதா உரைநடை விருது: கலாப்ரியா
நூல்: நினைவின் தாழ்வாரங்கள்
தேர்வு: பிரபஞ்சன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
2. சுஜாதா சிறுகதை விருது: ஜெயந்தன்
நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்
தேர்வு: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: வம்சி
3. சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்
நூல்: காந்தியை கொன்றது தவறுதான்
தேர்வு: ஞானக்கூத்தன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
4. சுஜாதா நாவல் விருது : ம.காமுத்திரை
நூல்: மில்
தேர்வு: வாஸந்தி
வெளியீடு: உதயகண்ணன்
5. சுஜாதா சிற்றிதழ் விருது: Dr.G.சிவராமன்
சிற்றிதழ்: பூவுலகு
தேர்வு: திலீப் குமார்
6. சுஜாதா இணைய விருது :லேகா
வலைப்பதிவு: யாழிசை www.yalisai.blogspot.com
தேர்வு : எஸ். ராமகிருஷ்ணன்
அனைவரும் வருக
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
உயிர்மை
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை600018
தொலைபேசி: 91-44-24993448
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com
Monday, March 22, 2010
அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்
‘அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்’ - மனுஷ்ய புத்திரன் நேர்காணல்
இந்த நேர்காணலின் முதல் பகுதியைக் காண இந்தச் சுட்டியை பயன்படுத்துங்கள்.
"மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும்" –மனுஷ்ய புத்திரன் நேர்காணல்
Sunday, March 14, 2010
செல்வாக்கு மிக்கவர்களில் மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்.
– இந்தியா டுடே தேர்வு
தேசிய அளவிலும் தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க 10 பேர்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் எழுத்து, இதழியல், பதிப்பு சார்ந்த பங்களிப்புகளுக்காக மனுஷ்ய புத்திரன் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மனுஷ்ய புத்திரனுடன் இப்பட்டியலில் இடம்பெற்றிப்பவர்கள்:
1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)
2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)
3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)
4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)
5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)
6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)
7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)
8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)
9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்
மனுஷ்ய புத்திரன் இந்தப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது:
மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன்
41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை
எந்தப் பின்புலமும் இல்லாமல் இவர் தொடங்கிய இந்தப் பதிப்பகம் இப்போது மாத இதழ், இணைய இதழ்(உயிரோசை) என விரிவடைகிறது
ஏனெனில் முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிடவதற்கான முதல் தேர்வாக இருக்கிறது இவரது பதிப்பகம். ஏனெனில் மற்ற பதிப்பகங்களைவிட உயிர்மை மூலம் தங்களின் வாசகர்களை சிறப்பாகச் சென்றடையலாம் என நினைக்கிறார்கள்.
ஏனெனில் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சிக்காக 100 புத்தகங்களை வெளியிட்ட இவரது பதிப்பகம் புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கான ஊக்க சக்தியாக திகழ்கிறது.
ஏனெனில் வேகமாக வளர்ந்து வரும் இவரது பதிப்பகம் தமிழ்ப் பதிப்புலகின் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறது.
ஏனெனில் தமிழ்க் கவிஞர்களில் அதிக கவனம் பெறும், அதிக வீச்சு கொண்ட இவர், சன்ஸ்கிருதி சம்மான் விருது வென்றவர்.
கனவுத் திட்டம்: குறைந்தது 500 தமிழ் எழுத்தாளர்கள் பற்றி இணையத்தில் நல்ல புகைப்படத்துடன் வாழ்க்கைக் குறிப்பு தயார் செய்வது. இத் திட்டத்திற்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் தேவைப்படலாம் என்கிறார்.
மைல் கல்: கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு எழுதிய அல்லா ஜானே என்ற மனதை உருக்கும் பாடல்.
சமீபத்திய மகிழ்ச்சி: சுஜாதா விருதுகளை உருவாக்கியிருப்பது.
நன்றி: இந்தியா டுடே(தமிழ்) மார்ச் 24, 2010)
Saturday, March 06, 2010
நித்யானந்தர்: சில குறிப்புகள்
1. நித்யானந்தர் சரஸ வீடியோ வெளிவந்த தினம் மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி என்பது உண்மையில் ஒரு ’இன்ப’ அதிர்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும்.
2. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய தமிழ்ப் படங்கள் அவசரமாகத் திரையிடப்படுவதைப் போலவே நித்யானந்தர் வீடியோவும் அவசரமாக வெளியிடப்பட்டிருகிறது என்று கருத இடமிருக்கிறது. இல்லாவிட்டால் இதனுடைய டி.ஆர்.பி. ரேட்டிங் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது
3. Voyeurism என்பதற்கு ஒரு செய்தி மதிப்பினை வழங்கி அதன் மூலம் அதை ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு அனுபவமாக மாற்றிய சன் டி.வி குழுமம் தன்னளவில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளது. இதுபோன்ற புரட்சிகளை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்கும் கபடவேடதாரிகள் தொடர்பாகவும் அது மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
4. வாய்வழி புணர்ச்சி தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் நிலவும் மனத் தடைகளை ஒரே மூச்சில் களைந்த நக்கீரன் மற்றும் சன் குழுமம் மிகவும் பாராட்டிற்குரியவர்கள்.
5. நித்யானந்தர் சரஸ வீடியோ பற்றி ஊடகப் பழக்கமும் தொடர்பும் உள்ள அனைவருமே அநேகமாக கருத்துத் தெரிவித்துவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறந்துபோன ஒரு விஷயம், நித்யானந்தர் தான் ஒரு நடிகையுடன் படுக்க மாட்டேன் என்றோ ரஞ்சிதா தான் ஒரு சாமியாருடன் படுக்க மாட்டேன் என்றோ எந்த இடத்திலும் இதற்கு முன் அறிவிக்கவில்லை என்பதைத்தான்.
கட்டுரையை தொடர்ந்து படிக்க........
http://manushyaputhiran.uyirmmai.com/
Saturday, February 13, 2010
ஒரு காதலை தெரிவிக்கும்போது
தயங்கித் தயங்கி
தன் காதலை தெரிவிக்கிறாள்
அது அவள் முதல் காதலாக
இருக்கவேண்டும்
அல்லது
ஒவ்வொரு காதலையும்
தெரிவிக்கும்போதும்
அவள் அவ்வளவு
குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்
உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அது நினைவூட்டுகிறது
அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவள்
வீட்டைப் பற்றி பேசினாள்
அமமவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்
ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்
அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே அவள் பேசினாள்
அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்
என்று அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்
தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்
அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை
அதை ஒரு உணர்ச்சிகரமான
நாடகமாக கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்
ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது
அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்
ஆனால் அந்தச் சந்திப்பு
நீணடதாக இருந்தது
ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை
அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு
அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது
ஆனால் அந்த சந்திப்பு
முடிவடைவதாகவே இல்லை
அவள்
எல்லாவற்றையும்
முழுமையாக நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையா
என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால்
அவள் அதையே யோசித்தாள்
ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது
அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்
இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது
14.2.2010
8.43 am