Sunday, March 14, 2010

செல்வாக்கு மிக்கவர்களில் மனுஷ்ய புத்திரன்


தமிழகத்தின் செல்வாக்கு மிக்க 10 பேரில் ஒருவராக
மனுஷ்ய புத்திரன்.
– இந்தியா டுடே தேர்வு


தேசிய அளவிலும் தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க 10 பேர்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் எழுத்து, இதழியல், பதிப்பு சார்ந்த பங்களிப்புகளுக்காக மனுஷ்ய புத்திரன் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனுடன் இப்பட்டியலில் இடம்பெற்றிப்பவர்கள்:


1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)
2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)
3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)
4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)
5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)
6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)
7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)
8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)
9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்

மனுஷ்ய புத்திரன் இந்தப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது:

மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன்
41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை


எந்தப் பின்புலமும் இல்லாமல் இவர் தொடங்கிய இந்தப் பதிப்பகம் இப்போது மாத இதழ், இணைய இதழ்(உயிரோசை) என விரிவடைகிறது

ஏனெனில் முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிடவதற்கான முதல் தேர்வாக இருக்கிறது இவரது பதிப்பகம். ஏனெனில் மற்ற பதிப்பகங்களைவிட உயிர்மை மூலம் தங்களின் வாசகர்களை சிறப்பாகச் சென்றடையலாம் என நினைக்கிறார்கள்.

ஏனெனில் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சிக்காக 100 புத்தகங்களை வெளியிட்ட இவரது பதிப்பகம் புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கான ஊக்க சக்தியாக திகழ்கிறது.

ஏனெனில் வேகமாக வளர்ந்து வரும் இவரது பதிப்பகம் தமிழ்ப் பதிப்புலகின் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறது.

ஏனெனில் தமிழ்க் கவிஞர்களில் அதிக கவனம் பெறும், அதிக வீச்சு கொண்ட இவர், சன்ஸ்கிருதி சம்மான் விருது வென்றவர்.

கனவுத் திட்டம்:
குறைந்தது 500 தமிழ் எழுத்தாளர்கள் பற்றி இணையத்தில் நல்ல புகைப்படத்துடன் வாழ்க்கைக் குறிப்பு தயார் செய்வது. இத் திட்டத்திற்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் தேவைப்படலாம் என்கிறார்.

மைல் கல்: கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு எழுதிய அல்லா ஜானே என்ற மனதை உருக்கும் பாடல்.

சமீபத்திய மகிழ்ச்சி:
சுஜாதா விருதுகளை உருவாக்கியிருப்பது.

நன்றி: இந்தியா டுடே(தமிழ்) மார்ச் 24, 2010)

மனுஷ்ய புத்திரன் மின்னஞ்சல்: manushyaputhiran@gmail.com