Friday, April 30, 2010

சுஜாதா விருதுகள் 2010 விழா மே 3



SUJATHA AWARDS 2010
உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும்
சுஜாதா விருதுகள் 2010
விருது வழங்கும் விழா


காலத்தை வென்ற கலைஞனின் நினைவாக 6மதிப்பு வாய்ந்த விருதுகள்

நாள்: 3.5.2010 திங்கட்கிழமை நேரம்: மாலை 6மணி
இடம்: தேவநேய பாவணர் மாவட்ட நூலகம் ( LLA Building) 735, அண்ணா சாலை, சென்னை-600 002

வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

வாழ்த்துரை : இந்திரா பார்த்தசாரதி
ஞானக்கூத்தன்
பேராசிரியர் கு. ஞானசம்பந்தம்
பாலு மகேந்திரா
சாரு நிவேதிதா
வாஸந்தி
தமிழச்சி தங்கபாண்டியன்
ஏ.நடராஜன், முன்னாள் இயக்குனர் தூர்தஷன்
திரைக்கலைஞர்.ரா. பார்த்திபன்

நன்றியுரை: திருமதி சுஜாதா ரங்கராஜன்



சுஜாதா விருதுகள் 2010

1. சுஜாதா உரைநடை விருது: கலாப்ரியா
நூல்: நினைவின் தாழ்வாரங்கள்
தேர்வு: பிரபஞ்சன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்

2. சுஜாதா சிறுகதை விருது: ஜெயந்தன்
நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்
தேர்வு: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: வம்சி

3. சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்
நூல்: காந்தியை கொன்றது தவறுதான்
தேர்வு: ஞானக்கூத்தன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

4. சுஜாதா நாவல் விருது : ம.காமுத்திரை
நூல்: மில்
தேர்வு: வாஸந்தி
வெளியீடு: உதயகண்ணன்

5. சுஜாதா சிற்றிதழ் விருது: Dr.G.சிவராமன்
சிற்றிதழ்: பூவுலகு
தேர்வு: திலீப் குமார்

6. சுஜாதா இணைய விருது :லேகா
வலைப்பதிவு: யாழிசை www.yalisai.blogspot.com
தேர்வு : எஸ். ராமகிருஷ்ணன்



அனைவரும் வருக
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

உயிர்மை
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை600018
தொலைபேசி: 91-44-24993448
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com

Monday, March 22, 2010

அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்

அகநாழிகை மார்ச் 2010 இதழில் வெளிவந்த மனுஷ்ய புத்திரனின் நேர்காணலை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.
‘அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்’ - மனுஷ்ய புத்திரன் நேர்காணல்
இந்த நேர்காணலின் முதல் பகுதியைக் காண இந்தச் சுட்டியை பயன்படுத்துங்கள்.
"மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும்" –மனுஷ்ய புத்திரன் நேர்காணல்

Sunday, March 14, 2010

செல்வாக்கு மிக்கவர்களில் மனுஷ்ய புத்திரன்


தமிழகத்தின் செல்வாக்கு மிக்க 10 பேரில் ஒருவராக
மனுஷ்ய புத்திரன்.
– இந்தியா டுடே தேர்வு


தேசிய அளவிலும் தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க 10 பேர்களின் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் எழுத்து, இதழியல், பதிப்பு சார்ந்த பங்களிப்புகளுக்காக மனுஷ்ய புத்திரன் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனுடன் இப்பட்டியலில் இடம்பெற்றிப்பவர்கள்:


1. வேணு ஸ்ரீனிவாசன்( தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)
2. என்.ஸ்ரீனிவாசன்(எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)
3. ஏ.சக்திவேல்(தலைவர், பாப்ப்பீஸ் குழுமம்)
4. ப்ரீத்தா ரெட்டி( நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)
5. உதய நிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி அழகிரி( ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)
6. கமல் ஹாசன் ( நடிகர், இயக்குனர்)
7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா(எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)
8. மயில்சாமி அண்ணாதுரை( தலைவர், சந்திராயன்)
9. ஆர்.ஆர்.கோபால்(ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்

மனுஷ்ய புத்திரன் இந்தப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது:

மனுஷ்ய புத்திரன்: கவிஞர்களின் கவிஞன்
41. கவிஞர், ஆசிரியர், பதிப்பாளர், உயிர்மை


எந்தப் பின்புலமும் இல்லாமல் இவர் தொடங்கிய இந்தப் பதிப்பகம் இப்போது மாத இதழ், இணைய இதழ்(உயிரோசை) என விரிவடைகிறது

ஏனெனில் முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிடவதற்கான முதல் தேர்வாக இருக்கிறது இவரது பதிப்பகம். ஏனெனில் மற்ற பதிப்பகங்களைவிட உயிர்மை மூலம் தங்களின் வாசகர்களை சிறப்பாகச் சென்றடையலாம் என நினைக்கிறார்கள்.

ஏனெனில் சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சிக்காக 100 புத்தகங்களை வெளியிட்ட இவரது பதிப்பகம் புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கான ஊக்க சக்தியாக திகழ்கிறது.

ஏனெனில் வேகமாக வளர்ந்து வரும் இவரது பதிப்பகம் தமிழ்ப் பதிப்புலகின் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறது.

ஏனெனில் தமிழ்க் கவிஞர்களில் அதிக கவனம் பெறும், அதிக வீச்சு கொண்ட இவர், சன்ஸ்கிருதி சம்மான் விருது வென்றவர்.

கனவுத் திட்டம்:
குறைந்தது 500 தமிழ் எழுத்தாளர்கள் பற்றி இணையத்தில் நல்ல புகைப்படத்துடன் வாழ்க்கைக் குறிப்பு தயார் செய்வது. இத் திட்டத்திற்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் தேவைப்படலாம் என்கிறார்.

மைல் கல்: கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு எழுதிய அல்லா ஜானே என்ற மனதை உருக்கும் பாடல்.

சமீபத்திய மகிழ்ச்சி:
சுஜாதா விருதுகளை உருவாக்கியிருப்பது.

நன்றி: இந்தியா டுடே(தமிழ்) மார்ச் 24, 2010)

மனுஷ்ய புத்திரன் மின்னஞ்சல்: manushyaputhiran@gmail.com

Saturday, March 06, 2010

நித்யானந்தர்: சில குறிப்புகள்




1. நித்யானந்தர் சரஸ வீடியோ வெளிவந்த தினம் மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி என்பது உண்மையில் ஒரு ’இன்ப’ அதிர்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும்.
2. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய தமிழ்ப் படங்கள் அவசரமாகத் திரையிடப்படுவதைப் போலவே நித்யானந்தர் வீடியோவும் அவசரமாக வெளியிடப்பட்டிருகிறது என்று கருத இடமிருக்கிறது. இல்லாவிட்டால் இதனுடைய டி.ஆர்.பி. ரேட்டிங் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது
3. Voyeurism என்பதற்கு ஒரு செய்தி மதிப்பினை வழங்கி அதன் மூலம் அதை ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு அனுபவமாக மாற்றிய சன் டி.வி குழுமம் தன்னளவில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளது. இதுபோன்ற புரட்சிகளை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்கும் கபடவேடதாரிகள் தொடர்பாகவும் அது மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
4. வாய்வழி புணர்ச்சி தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் நிலவும் மனத் தடைகளை ஒரே மூச்சில் களைந்த நக்கீரன் மற்றும் சன் குழுமம் மிகவும் பாராட்டிற்குரியவர்கள்.
5. நித்யானந்தர் சரஸ வீடியோ பற்றி ஊடகப் பழக்கமும் தொடர்பும் உள்ள அனைவருமே அநேகமாக கருத்துத் தெரிவித்துவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறந்துபோன ஒரு விஷயம், நித்யானந்தர் தான் ஒரு நடிகையுடன் படுக்க மாட்டேன் என்றோ ரஞ்சிதா தான் ஒரு சாமியாருடன் படுக்க மாட்டேன் என்றோ எந்த இடத்திலும் இதற்கு முன் அறிவிக்கவில்லை என்பதைத்தான்.


கட்டுரையை தொடர்ந்து படிக்க........

http://manushyaputhiran.uyirmmai.com/

Saturday, February 13, 2010

ஒரு காதலை தெரிவிக்கும்போது

ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி
தன் காதலை தெரிவிக்கிறாள்

அது அவள் முதல் காதலாக
இருக்கவேண்டும்
அல்லது
ஒவ்வொரு காதலையும்
தெரிவிக்கும்போதும்
அவள் அவ்வளவு
குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்

உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அது நினைவூட்டுகிறது

அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை

அப்போது அவள்
வீட்டைப் பற்றி பேசினாள்
அமமவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்
ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்

அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே அவள் பேசினாள்
அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்
என்று அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்


தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்

அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை

அதை ஒரு உணர்ச்சிகரமான
நாடகமாக கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்

ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது
அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்
ஆனால் அந்தச் சந்திப்பு
நீணடதாக இருந்தது

ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை
அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு
அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது
ஆனால் அந்த சந்திப்பு
முடிவடைவதாகவே இல்லை


அவள்
எல்லாவற்றையும்
முழுமையாக நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையா
என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால்
அவள் அதையே யோசித்தாள்

ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது
அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்

இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது




14.2.2010
8.43 am

Tuesday, July 21, 2009

சாருவுக்கு ஒரு கடிதம்

மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் படித்தேன். தமிழில் இப்போது எழுதிவரும் எழுத்தாளர்களில் விவரமானவர்கள் என்று நான் கருதும் இரண்டுபேரில் நீங்களும் ஒருவர். என்னை ஒரு சிவாஜி ரசிகன் எனக் கண்டுபிடித்த முதல் ஆள் நீங்கள்தான் என்பதால் எனது கருத்து உறுதிப்படுகிறது. பொதுவாக சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கியச்சூழலில் மதிக்கமாட்டார்கள். அதனால் இந்த உண்மையை இவ்வளவு காலம் கட்டிக் காப்பாற்றி வந்தேன். நீங்கள் அதைக் கண்டுபிடித்தீர்கள் என்பதைவிட அம்பலப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலான சிவாஜி படங்களில் சிவாஜி உணர்வுபூர்வமான உறவுகளில் தோற்கடிக்கப்படுவார். அவரது வெற்றிபெற்ற அநேகப்படங்களில் அவர் மனம் கசந்துவெளியேறிச் செல்லும் பாத்திரங்களையே ஏற்றிருக்கிறார். சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிவாஜிகணேசன்களின் நிலை எப்போதும் அதுதான். உங்கள் பதிவு வெளிவந்ததும் பல நண்பர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள்

‘சாருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?’

‘ஒரு பிரச்சினையும் இல்லையே.’

‘சாரு ஆன்லைனில் உங்களைத் திட்டி எழுதியிருக்காரே.’

‘அப்படியா.. நான் படிக்கலையே.’

‘அதாங்க... மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும்’

‘ஓ.. அதுவா...அதுல திட்டி எதுவும் இருக்கறதா தெரியலையே.’

‘சும்மா நடிக்காதீங்க...’

‘நான் ஏங்க நடிக்கணும்?’

‘இல்ல நீங்கள் ரெண்டுபேரும் பேசிவச்சுகிட்டு இதையெல்லாம் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்.’

இது ஒரு சாம்பிள் உரையாடல்

தொடர்ந்து படிக்க..................
www.manushyaputhiran.uyirmmai.com

Friday, July 17, 2009

மனுஷ்ய புத்திரன் பக்கங்களில்

உயிர்மை மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் சமீபத்திய பதிவுகள்.
1. என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்..
2. அன்புள்ள வண்ணதாசனுக்கு
3.மனுஷ்ய புத்திரன் மங்கையர் மலர் பதில்கள்
4. மனுஷ்ய புத்திரன் குங்குமம் பதில்கள்
வாசிக்க
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Wednesday, July 01, 2009

தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?

இன்று காலை கணினியை திறந்ததும் முத்துக்கிருஷ்ணன் சாட்டில் வந்து இதைப் படிங்க முதல்ல என்று இரண்டு இணைப்புகளை தந்தார். அது கவிஞர் தேவேந்திரபூபதியின் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கு பற்றி கவிஞர் தமிழ்நதி தனது வலைப்பூவில் எழுதிய இரண்டு பதிவுகள்.

http://tamilnathy.blogspot.com/
http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html
கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்......
கட்டுரையை தொடர்ந்து வாசிக்க.....
http://www.manushyaputhiran.uyirmmai.com/

Tuesday, March 10, 2009

கண்ணிவெடிகளின் ஊடே: ஒரு துய்ரக் கதை

வாழ்க்கைச் சித்திரம்:வானத்தின் மறுபக்கம்

அமெரிக்காவிலுள்ள ஏ. பி. சி. நியூஸ் - குட்மார்னிங் அமெரிக்கா (ABC News--Good Morning America) தொலைக்காட்சியும், சைமன் - சஸ்டர் (Simon-Schuster) பதிப்பகமும் இணைந்து, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது வாசகர்களுக்காக அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்த கட்டுரைப் போட்டியொன்றை அறிவித்தது. இக்கட்டுரைப் போட்டிக்காக சுமார் 6000 கட்டுரைகளும் மற்றும் 20000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஈர்ப்பான உண்மைக் கதைகளும் வந்தடைந்திருக்கின்றன. இறுதியில் நடுவர் குழுவினர், பெட்டி பர்கி யூஸன், மெர்ஸிடஸ் ஃபுளோரன் ஷியா புரூட்நிக்கி மற்றும் ஃபாரா அஹ்மதி ஆகிய மூன்று நபர்கள் எழுதியிருந்த படைப்புகளைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்து, வாசகர்களின் வாக் கெடுப்புக்கு விட்டனர். வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், ஃபாரா அஹ்மதி யின் வாழ்க்கைக் கதை சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘The Other side of the sky’ என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஃபாரா அஹ்மதி.. தன்னுடைய ஏழாவது வயதில், கன்னிவெடி விபத்தொன்றில் தன் இடது காலை இழந்த ஃபாராவின் குழந்தைப்பருவம் பெரும் அச்சங்களும், சோகங்களும் நிறைந்தவை. தனது சகோதரர்கள் இருவரைத் தொலைத்ததோடு, தனது தந்தையையும், சகோதரிகளையும் வெடிகுண்டு விபத்தில் இழந்த ஃபாரா, தற்போது தன் அம்மாவோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். The other side of the sky என்கிற அந்தப் புத்தகச் சுருக்கத்தின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

தொடர்ந்து வாசிக்க

http://www.uyirmmai.com/


கரை மீண்ட காந்தி-இந்த வார உயிரோசையில்..

கடந்த வெள்ளிக்கிழமை காந்தியின் பொருட்கள் ஏலத்துக்கு வந்தன. 364ஆவது அயிட்டமாக இது ஏலத்துக்கு வந்தது. அப்போது காந்தி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச கேட்புத் தொகையாக ரூ. 15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ‘சிண்டிகேட்’ அமைத்து ஏலத்தில் பங்கேற்றனர். ஒரு இந்தியருக்கு எதிராக வேறு யாரும் ஏலம் கேட்கக் கூடாது என்று சிண்டிகேட்டில் நிபந்தனை போட்டு ஏலத் தொகை உயர்வைக் கட்டுப்படுத்த நினைத்தனர். ஆனால் ஏலம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இந்தக் கட்டுப்பாடு எல்லாம் தகர்ந்து மில்லியனில் எகிறியது. லண்டனிலிருந்து ஒருவர் ரூ. 8.75 கோடிக்கு ஏலம் கேட்டார். திடீர் திருப்பமாக பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா சார்பில் டோனி பேடி என்பவர் ரூ. 9.3 கோடிக்கு காந்தியின் பொருட்களை ஏலத்தில் எடுத்து இந்தியர்களின் ‘மானத்தை’ காத்தார். சட்ட சிக்கல்கள் இருப்பதால் காந்தியின் பொருட்கள் இரண்டு வார காலத்துக்கு ஏல நிறுவனத்திடமே இருக்கும். அதன்பின்னர் மல்லையாவிடம் அது ஒப்படைக்கப்படும்

கட்டுரையை முழுமையாக வாசிக்க...இன்னும் ஏராளமான புத்தம் புதிய கட்டுரைகளுடன் http://www.uyirmmai.com/uyirosai/

Monday, September 29, 2008

நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி

திரைகளுக்குப் பின்னே
தமிழ் மகன்

நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.
தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் (அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.
விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.
``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.
பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.
அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

வலது சாரி அரசியலின் மூன்று முகங்கள்
மாயா

இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/


மனம் பிறந்த சட்டங்கள்
ஆர். அபிலாஷ்
இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.
பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"
அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

ஒரு பால் உறவு: ஏனிந்த பதட்டம்?
வாஸந்தி

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் பல சூடான விவாதங்கள் அங்கு அரசியல் பரிணாமம் பெற்றன. அதில் முக்கியமான ஒன்று ஓரினத் திருமணங்கள். காலிஃபோர்னியாவில் அப்படிப்பட்ட திருமணங்கள் நடத்த மேயர் அனுமதி அளித்தவுடன் நூற்றுக்கணக்கான ஓரின ஜோடிகள் அங்கு பதிவு செய்துகொள்ள விரைந்தார்கள். வாஷிங்டனில் இருந்த ரிபப்ளிகன் அரசு அரண்டு போயிற்று. கிறித்துவ மதகுருமார்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஓரின உறவே தவறு என்கையில் ஓரின திருமணத்தை எப்படி அனுமதிப்பது? 'மீண்டும் ஜனித்த கிறித்துவர்" என்று சொல்லப்படும் அதிபர் புஷ் இத்தகைய திருமணங்கள் இயற்கைக்கு விரோதமானவை என்றார். திருமண பந்தம் பதிவு செய்யப்பட்டாலே அமெரிக்காவில் அன்றாட வாழ்விற்கு சௌகர்யம். சில சலுகைகள் உண்டு. அதனாலேயே ஓரின் உறவு வைத்து குடும்பம் செய்பவர்கள் அதை முறைப்படி சட்டப்பதிவு செய்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். அங்கு ஓரின உறவுகளின் இருப்பு ஓரளவுக்குப் பழகிப்போன விஷயமாக ஏற்கப்பட்டிருந்தாலும் சகஜமான விஷயம் இல்லை. பழமைவாதிகள் அதை அங்கீகரிக்க இன்றும் மறுத்து வருவது வியப்பில்லை. முற்போக்கு வாதிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் ஜனநாயக வாதிகளும் அதை முழுமையாக ஏற்கவில்லை.

தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

முகேஷ் அம்பானி-அனில் அம்பானி: அபூர்வ சகோதரர்கள்
மனோஜ்
போட்டுக் கொடுப்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நேரடியாக போட்டுக் கொடுப்பது. மற்றொன்று, போகிறபோக்கில் நாசூக்காக போட்டுக் கொடுப்பது. முகேஷ் அம்பானி இரண்டாம் வகை. அவர் போட்டுக் கொடுத்தது தன் தம்பியைத்தான். எங்கே, எதற்கு என்று போவதற்கு முன் உலகின் பணக்கார சகோதரர்களின் குடும்பக் கதைக்குள் கொஞ்சம் சென்று வரலாம். இந்தியாவின் மிகப்பெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் செல்ல புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. அப்பாவிடம் அமைதியாக அடங்கி, ஒடுங்கி மும்பையில் வளர்ந்தவர்கள்


தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/

இன்னும் பல சிறப்பு ஆக்கங்களுடன்

இந்த வார உயிரோசை இதழ் உங்களுக்காக.........................
http://www.uyirmmai.com/

Wednesday, September 24, 2008

ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

ரஜினி தமிழக அரசியல் களத்திற்குத் தயாராவதற்காக பேவரைட் ஜோதிடர்களை நாடுகிறார், வட இந்தியாவில் எல்.கே.அத்வானி தனக்குரியது என்று கருதும் பிரதமர் நாற்காலிக்குத் தயாராவதற்காக ஜோதிடர்களை நாடுகிறார். திராவிடச் சூரியனின் குடும்பத்தினர் உள்பட பல அரசியல்வாதிகளும் ஜோதிடர்களின் மந்திராலோசனையைப் பெறுவது வழக்கம் என்றாலும் ரஜினி ஒரு வலதுசாரி அரசியல்வாதியாகத்தான் வருவார் என்று அவர் நெற்றியில் எழுதி ஒட்ட வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற வலதுசாரி இயக்கங்கள் எதுவும் வலுவாகக் காலூன்றியதில்லை என்ற நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் சூழலில் இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு அபாயகரமான வலுவைக் கொடுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தங்களது இந்துத்துவ அரசியலை முன்னிறுத்த அவர்களுக்கு ஒரு சரியான வசீகரமிக்க தலைவர் கிடைத்தால் அது வெறும் கையை சுற்றிக்கொண்டிருப்பவன் கையில் ஒரு போர் வாளைக் கொடுப்பதற்குச் சமம்.

- சஞ்சித்

.

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...

http://www.uyirmmai.com/

Tuesday, September 23, 2008

சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்


சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்...

தமிழவன்


பாரதியாருடைய காலத்தில் சங்க இலக்கியம் ஓரளவு பரவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாலும் பெரும்பான்மை பிராமணர்களைப் போல பாரதியும் சங்க இலக்கியத்தால் பாதிப்படையவில்லை. அவருடைய காலத் தமிழ் முழுசும் சங்க இலக்கியத்தால் பாதிப்பு அடையவில்லை. பாரதி தாசன் எப்படித் தன் இலக்கியத்தை முழுமையாய் சங்க இலக்கியத்துக்குள் கொண்டுவந்தாரோ அந்த அளவு பாரதியைச் சங்க இலக்கியப் படிப்பு பாதிக்காத சூழல் அன்று இருந்திருக்கிறது. ஆனால் பாரதி காலம் வரை தமிழில் இல்லாத அனைத்திந்தியா, ஒரு சிந்தனைச் சட்டகமாய்த் தமிழிலக்கியத்தில் பாரதி காலத்தில் வருகிறது. இதற்கு இலக்கியக்காரணம் இல்லை; அரசியல் காரணம் இருக்கிறது. சுதந்திரப் போர் தமிழில் அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை - அனைத்திந்தியாவை - கொண்டுவந்து சேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி 1967-ல் தமிழகத்தில் வேரறுக்கப்பட்டதற்கும் அன்றிலிருந்து தமிழ்ப்பண்பாட்டை அது பாதிக்காத ஒரு வடநாட்டுக் கட்சியாகவே தொடந்து மிளிர்வதற்கும் ஆழமான பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. எல்லோரும் அரசியல் காரணம் என்று கருதினாலும் அது அரசியல் காரணமல்ல; பண்பாட்டுக் காரணம்- அதாவது சங்க இலக்கியம் தன்னைத் தமிழ் மண்ணில் நிலைநிறுத்திய செயல்தான் 1967-இலிருந்து காங்கிரஸ் பண்பாட்டைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. 1905 வாக்கில் பாரதிமூலம் தொடங்கப்பட்ட ஒரு - அனைத்திந்திய - அடையாளத்தை, சங்க இலக்கியம் கடந்த சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாற்றியுள்ளது. இதற்கு மாற்றான அனைத்திந்திய பிரதேசங்களின் பண்பாட்டைக் கொண்டு வரும் அனைத்தியக் கடமையைச் செய்யாததே திராவிடக்கட்சிகளின் அனைத்திந்தியத் தோல்வி. முரசொலி மாறனை அவருடைய மாநில சுயாட்சி என்ற சிறப்புப்புத்தகம் சார்ந்து நினைவுநாள் கொண்டாடாமல் வேறு முறையில் கொண்டாடியபோதே திராவிடச் சிந்தனை இந்திய அரசியலில் உயர்ந்தோர் எதிர்பார்த்த பயனைத் தராமல் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தெரிந்தது. ஓரளவு வி.பி. சிங் மூலமும், மாயாவதி மூலமும் திராவிடச்சிந்தனைகள் அனைந்திந்தியாவுக்கும் போன ஆரம்பக்கட்டம் முடிந்துவிட்டது போலுள்ளது

முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...
http://www.uyirmmai.com/

Sunday, September 14, 2008

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்று helpless? என்ற தலைப்பில் தில்லி குண்டுவெடிப்புகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருக்கிறது. இந்த தலைப்பின் பின் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் நாடு முழுக்க பரவிவரும் பீதியின் அடையாளங்களே. இது தொடர்கதையாகிவிட்டது. மீண்டும் அப்பாவிகளும் எளிய மக்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடைபாதையில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லபட்ட பின்பு எஞ்சிய ஒருவர் கேட்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம்?' என்று.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஏதோ இது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல. இந்த அபத்தமான பல்லவி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போதும் பாடப்படுகிறது. இந்த பயங்கரவாத வலைப் பின்னலை கண்டுபிடிக்க முடியாத மொத்த அரசு அமைப்பின் தோல்வியை கொடூரமான சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக தடுத்து நிறுத்தமுடியாது. இந்தக் குற்றங்களை இழைப்பவர்களின் தொடர்புகளும் அதற்கு பின் இருக்கும் மனோபாவமும் எல்லா சட்டரீதியான அச்சுறுத்தல்களையும் கடந்தவை.....

இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்க வாருங்கள் உயிர்மை இணைய தளத்தின் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு...

http://www.uyirmmai.com/

தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்


Tuesday, September 09, 2008

உயிரோசை இந்த வார இதழில்...

உயிர்மை.காம் வழ்ங்கும் உயிரோசை வார இதழ் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளின் பங்களிப்புகளோடு செப்டம்பர் 1 முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது. திங்கள்கிழமை தோறும் பதிவேற்றம் செய்யப்படும் உயிரோசையின் இரண்டாம் இதழில் பின்வரும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. சிந்தனைக்கும் வாசிப்பனுபவத்திற்குமான ஒரு முழுமையான வார இதழ் உயிரோசை.

http://www.uyirmmai.com/

உயிரோசை 8.9.2008 இதழில்..............


கட்டுரை
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
அரங்கத்தின் விளக்குகளெல்லாம் அணையவும் நம் முன்னால் இருக்கும் வெள்ளித் திரையில் நம்முடைய முழு எதிர்பார்ப்புகளும் குவியவும் செய்கிற அந்த நிமிடத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது என்று சொல்கிறார் பிரபல திரைப்பட விமரிசகியான பவுலின் கீல். நிஜம்தான். அதுபோல வேறொரு நிமிஷம் இல்லைதான். சினிமா போல வேறொரு அனுபவமும் இல்லை.
-சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
பருவக் கால ஓட்டத்தால் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் கோஸி நதி இந்த வருடம் ஏற்படுத்திய அழிவை, துயரம் என்று சாதாரணமாக வகைப்படுத்த முடியாது. இமய மலையிலிருந்து வட இந்தியாவின் சமவெளிக்குக் கிழக்கு பீகார் வழியாகச் செல்லும் தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி சற்றும் சம்பந்தமில்லாத மேற்கு பீகாரில் புகுந்து, வீடுகள், வயல்கள் வழியாக தனக்குப் புதிய பாதை அமைத்துக்கொண்டு கடலைத் தேடி ஓடுகிறது கோஸி. அதன் பாதையிலிருந்து பெரும்பாலான மனித நாகரிகத்தின் தடங்கள் துடைத்தகற்றப்பட்டுவிட்டன.
-மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
பிரித்தனில் புகலிடம் தேடிய சல்மான் ருஷ்டியின் பாதுகாப்புக்காக பிரித்தானிய அரசு நியமித்த பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இவான்ஸ். அந்த அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. அதில் தன்னைப் பற்றி எழுதியிருப்பவை அவதூறுகள்; தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கமேற்படுத்தும் நோக்கத்தில் இட்டுக்கட்டியவை. தன்னுடைய ஆளுமையை அவமதிக்கும் வகையில் கற்பனையான தகவல்களால் திணிக்கப் பட்டவை. இது ருஷ்டியின் வாதம்.
-சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
இந்தியா 'மகத்தான' வெற்றி பெற்றிருக்கிறது. அணு எரிபொருள் வாங்க 34 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிவிட்டது. 45 நாடுகள் கூட்டமைப்பு பெரிய மனது வைத்து அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இனி அணு உலைகளில் எரிபொருளைப் போட்டு மின்சார உற்பத்தியை பெருக்கி நாட்டை ஜொலிக்கச் செய்யலாம். அப்புறம் மெதுவாக வல்லரசாகி விடலாம்.
சமீபத்தில் இத்தனை திடுக்கிடும் திருப்பங்களுடன் எந்த உலக நிகழ்வும் நடந்ததில்லை.
-மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விவாகரத்துக் கோரிக்கையை நிராகரித்த வழக்கு அதற்குச் சரியான உதாரணம். பதினாறு ஆண்டுகளாக நரேந்திர குமார் வர்மா என்ற நபர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர். மணவாழ்வு முறிந்து ஒரு தம்பதி பத்தாண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்திருந்தால் விவாகரத்துப் பெறுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும் என்றுதானே நாம் நினைப்போம்? அதுதான் இங்கு இல்லை. இந்திய விவாகரத்துச் சட்டத்தின்படி, தம்பதிகளின் பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் போனால் விவாகரத்து கிடைப்பது, எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், மிகச் சிக்கலான விஷயம். வர்மாவின் மனைவி விவாகரத்துக்கு ஒப்பாததால் நிலுவையில் இருக்கும் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிற்று என்றாலும் கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் முடிவுக்கு வராதது பகுத்தறிவுக்கு விரோதமானதாக எனக்குப்படுகிறது.
-வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
சின்னப் பிள்ளைகள் குறும்பு செய்யும்போது, 'பூச்சாண்டி' கிட்டே பிடிச்சுக் கொடுத்துடுவேன் என மிரட்டுற குரலை கிராமங்களில் அடிக்கடி கேட்கலாம். யார் அந்தப் பூச்சாண்டி? ஆள் எப்படி இருக்கும்? என்று யோசிப்பதைவிட அரூபமாக மனத்தில் தோன்றும் பயம்தான் குழந்தையைப் பாடாய்ப் படுத்தும். அப்படி இன்னொரு பெயர்தான் 'பள்ளிக்கூடம்'.
-ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள். தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள்.
-கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
-அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
-ஜெயந்தி சங்கர்
சிறுகதை
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
-கே.பாலமுருகன்
கவிதை
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
-கோகுலன்
பசித்தலையும் சுயம்
-எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
-செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
-த.அரவிந்தன்
மெளனத்தின் மொழி
-றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
-ஆலன் ஸ்பென்ஸ்
அறிவிப்புகள்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
--
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
-இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
--
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
--
பழமொழிகளும் சொலவடைகளும்
பழமொழிகளும் சொலவடைகளும்
அச்சாணி இல்லாத தேர்; முச்சாணும் ஓடாது.
அஞ்சாவது (பிறக்கும்) பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
-கழனியூரான்
நிகழ்வுகள்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
--
கடித இலக்கியம்
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
இந்தத் தொகுப்பைப் படித்து முடித்ததும் சுஜாதாவின் இதற்கான முன்னுரையைப் படித்தேன். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை இந்தத் தொகுதியின் பின் பகுதியிலும் கனவு இதழிலும் படித்தேன். செகாவுக்கு எதிர்மறையாக எப்படி அசோகமித்திரனும் அவர் போன்று எழுதுபவர்களும் படைக்கிறார்கள் என்று மழுப்பலாக எழுதிய க.நா.சு. வின் விமர்சனம் ஒன்றை தினமணியில் படித்தேன். அப்புறம் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
-கந்தர்வன்
சிற்றிதழ் பார்வை
புத்தகம் பேசுது
--
புது நூல்கள்
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
-தாஜ்
உங்கள் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்கள்
-எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com

Saturday, August 09, 2008

ஒரு பால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக பாராட்டிற்குரிய நவீன சிந்தனையுடைய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். நேற்று மெக்சிகோவில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய அவர் 'ஒரு பால் உறவினை சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு எல்லா உதவிகளும் செய்யப்போவதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் சார்பில் ஒரு அமைச்சர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

இந்தக் கட்டுரையின் முழு வடிவம் உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களில்...http://www.uyirmmai.com/

Wednesday, August 06, 2008

சைக்கோ கொலைகாரன் யார்?

சென்னையில் கடந்த சில வாரங்களாக இரவுக் காவலாளிகள், மற்றும் தெருக்களில் தூங்குபவர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவது ஒரு திகில் கதையாக மாறிவிட்டது. இந்த திகில் கதையின் வசனங்களின் ஒரு பகுதி ஊடகங்களாலும் இன்னொரு பகுதி போலீஸாராலும் எழுதபட்டு வருகிறது. 'சைக்கோ கொலைகாரன்' என்ற ஒரு கற்பனை பாத்திரத்தைத் தேடி மொத்த நகரமும் அலைந்து கொண்டிருக்கிறது. குற்றத்தின் பின்னே இருக்கும் நோக்கங்கள் அல்லது ஆதாயங்கள் வெளிப்படையாகத் தெரியாத குற்றங்கள் அனைத்தும் உளவியல் சார்ந்த மர்மக் குற்றங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஒரு 'சைக்கோ கொலைகார'னின் கதாபாத்திரம் இல்லாவிட்டால் குற்றம் குறித்த எல்லாக் கற்பிதங்களும் கலைந்துவிடும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி மொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்றதாக்கிவிடுகிறான். மிகக் கொடூரமான குற்றவாளி என்று அறியப்பட்ட ஒருவனது இலக்குகள் குறித்துக்கூட உத்தேசங்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் குற்றங்கள், அறியப்படாத நோக்கங்கள் கொண்ட குற்றங்கள் ஏற்படுத்தும் பதட்டம் மொத்த சமூகத்தையும் நோய்க்கூறு கொண்டதாக்கிவிடுகிறது. பீதியையும் பிறர்மீதான அச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் இனவாத மதவாத அமைப்புகளாகட்டும், ஊடகங்களாகட்டும் அவை ஒரு சமூகத் திரளுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகின்றன. இந்த உலகின் மிகப் பெரிய கொலைக் கருவி எதுவென்றால் அது அச்சம்தான். அச்சத்தினால் பிறழ்வு கொண்ட ஒரு தனிமனிதனின், சமூகத்தின் பிறருக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்த முடியாதவை. ..........

இந்தக் கட்டுரையை தொடந்து வாசிக்க உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களுக்கு வாருங்கள்.....http://www.uyirmmai.com/


Monday, August 04, 2008

கடற்கரையில் சில காகங்கள்

கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான வரிசை முடிவற்று நீண்டிருந்தது. எங்கெங்கும் மனிதத் தலைகள். செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆகியிருந்தன. காரணம் பீச் வாலிபால். அதற்கு முந்தைய தினங்களில் பத்திரிகைகள் பந்துகளை அடிக்க பறக்கும் பெண்களின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டிருந்தன. வழக்கமான தின்பண்ட வியாபாரிகளுடன் குடை ராட்டினக்காரர்கள், பலூன் விற்பவர்கள் என திருவிழா வெளியாகியிருந்தது. ஆஹா FMமிலிருந்து நேரடி விநாடி வினா நிகழ்ச்சிகள் ஒலிப்பெருக்கியில் அதிர்ந்துகொண்டிருந்தன. . ஒரு எட்டுவயது சிறுமி கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிய அவளது தகப்பனோ அல்லது வேறு யாரோ காசு வாங்கிக்கொண்டிருந்தார். குரங்கு வித்தை காட்டுபவனும் குரங்கும் கண்களில் பஞ்சடைந்து சோர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏராளமான பையன்கள் ஏராளமான பெண்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏராளமான பெண்கள் ஏராளமான பையன்களால் தாங்கள் பார்க்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கும் தற்காலிகமான சிறு கடைகள்....................

கட்டுரையை முழுமையாக படிக்க உயிர்மை வலைத் தளத்தில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு... http://www.uyirmmai.com/

Thursday, July 31, 2008

ரஜினி கற்றுக்கொண்ட பாடம் என்ன?

ரஜினி காந்த் பற்றிய ஏதேனும் ஒரு பரபரப்பு என்பது வழக்கமான ஒரு நடைமுறையாகிவிட்டது. இன்று குசேலன் படம் திரைக்கு வருவதை முன்னிட்டு அவரது ஒக்கேனகல் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன. இதைப் பற்றிய ஒரு பதிவு இன்று உயிர்மை.காமில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக ரஜினிகாந்த்தை புரிந்துகொள்வது பற்றி இப்பதிவு பேசுகிறது.
பார்க்க: www.uyirmmai.com

Friday, March 07, 2008

www.uyirmmai.com

விரைவில்
www.uyirmmai.com
தமிழில் ஒரு முழுமையான இணைய இதழ்
முழு விப‌ர‌ங்க‌ள் விரைவில்............