Monday, October 31, 2005

சன் டிவி பற்றிய குறிப்பும் சில எதிர்வினைகளும்

சென்னை மழை பற்றிய என்னுடைய முந்தைய பதிவு தொடர்பாக ஊடக வன்முறை குறித்த தங்கள் தீவிரமான பார்வைகளை முன்வைத்த நண்பர்களுக்கு நன்றி. அதில் இரண்டு எதிர்வினைகள் பற்றி இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.

சத்யம் என்ற பெயரில் இடப்பட்ட எதிர்வினையில் நான் என்னைவிட வசதியான ஊடகத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் இப்படி எழுதிருக்கிறேன் என்கிறது. இன்னொரு பெயரில்லாத எதிர்வினை பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதைவிட்டு சன் டிவிக்காக கண்ணீர் விடலாம் என்கிறது. தமிழ் வலைபதிவுகளிஎழுதுபவர்களின் தார்மீகமின்மைகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளின் நோக்கம்:

1. ஒரு விவாதத்தை முறித்து திசை திருப்புவது.
2.அவமானப்படுத்தி குரூர திருப்தி அடைவது.
3. அசலாக ஒரு வாக்கியத்தையோ அபிப்ராயத்தையோ உருவாக்க முடியாமல் பிறரது அபிப்ராயங்களின் நிழலில் சுய மைதுனம் செய்வது.
4. இருட்டிலிருந்து கல்லெறிந்து அபிப்ராயங்களை உருவாக்குபவர்களை துரத்துவது.

இதுபோன்ற ஆபாசங்களை வலைப்பதிவிலிருந்து நீக்கிவிடுவது சுலபம். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். ஒரு சமூகத்தில் ஆபாசமும் வக்கிரமும் பதிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும். நோயின் அறிகுறிகள் சுதந்திரமாக வெளிவரவேண்டும். சமூகவியலிலும் உளவியலிலும் ஆர்வம்கொண்ட எழுத்தாளன் என்ற வகையில் இதுபோன்ற பதிவுகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன. இவற்றை எழுதும் நபர்கள் இன்னும் கூட தங்களது மனோவிகாரத்தையும் கீழ்மையையும் விரிவாக பதிவு செய்வது அவசியம். வலைப்பதிவுகளின் உபயோகமும் கருத்து சுதந்திரத்தின் பயன்பாடும் தமிழ் வலைப்பதிவுகளில் முற்றிலும் புதிய தளத்தை எட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் அங்கீகரிக்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

14 comments:

சதயம் said...

தன்னிலை விளக்கம் என்கிற பெயரில் இன்னொரு பதிவு வருமென்று எதிர்பார்த்தேன்...கொஞ்சம் லேட்டா வந்திருக்கு.என்னுடைய பின்னூட்டம் ஒரு பொதுவான விமர்சனம் தானேயொழிய உங்களை அவமானப்படுத்தி குரூர திருப்தியடைவதல்ல, அப்படி என் பின்னூட்டம் மன உளைச்சலை உண்டு பண்ணியிருந்தால் வருந்துகிறேன்.மற்றபடி என்னுடைய கருத்துக்களில் நான் இன்னும் உறுதியாயிருக்கிறேன்.பின்னூட்டமிடுபவர்களுக்கு இலக்கணம் வகுக்கத் தெரிந்த நீங்கள் ஏன் உங்களுடைய நேர்மையை சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதுதான் என் கேள்வி.சன் டீவியில் மக்கள் சாகிறார்கள் என்று சொன்னால் ஜெயாவில் சுகமாய் வாழுகிறார்கள் என்று தம்பட்டமடிப்பதையும் பதிப்பித்திருந்தால் உங்களை "உள்ளூர் வயித்தெறிச்சல் கோஷ்டி" என கூறியிருக்கமாட்டேன் என்னமோ சன் டிவி மட்டும் அவுத்துபோட்டு கொண்டு ஆடுவதைப் போலவும் மற்றவர்கள் எல்லாம் யோக்ய சிகாமணிகள் மாதிரி தொணிக்கும் சாயலைத்தான் விமர்சித்தேன்.

நீங்கள் உட்பட எந்த ஊடக முதலாளியும் மக்களுக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட மகாத்மாக்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.உங்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிக்கொணர மனுஷ்யபுத்திரன், உயிர்மை என்கிற பெயர்கள் தேவைப்படும்போதுதான் பொருமுகிறீர்கள் என்கிறேன்.

வாக்கியங்களையும், அபிப்பிராயங்களையும் அசலாக உறுவாக்குவது பெரிய ஆரியவித்தையல்ல என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.நேரமின்மை மற்றும் அலுவல் பணிகளால், பதிவுகளை விமர்சனம் மட்டுமே செய்கிற என்போன்றோரை சுயமைதுனம் செய்பவர்கள் என்ற உங்கள் கருத்து உங்கள் மனவிகாரத்தையும், நேர்மையின்மையையும் காட்டுவதாக கருதுகிறேன்.

தீபத்திருநாள் வாழ்த்துக்கள் மனுஷ்யபுத்திரன்

அன்புடன்
சதயம்

manushya puthiran said...

சுன் டிவியை பற்றிய என்னுடைய விமர்சனம் ஜெயா டிவிக்கு ஆதரவானது என்றோ சன் டிவிக்கு எதிரான காழ்ப்புணர்வு என்றோ வியாக்யானம் செய்வது குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான். தமிழ் ஊடகங்கள் தொடர்பான என்னுடைய பார்வைகளை கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு சந்தர்பங்களில் தெளிவாக முன்வைத்திருக்கிறேன். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ஜெயா டிவி நடந்துகொண்ட விதம் குறித்து நான் எழுதியவற்றை படித்திருக்கிறீர்களா என்று இந்த நபரிடம் கேட்க மாட்டேன். இவர்களுக்கு ' எழுதும்' பழக்கம் மட்டுமே உண்டு. படிக்கும் பழக்கம் கிடையாது. ஒரு சூழலில் நடக்கும் உரையாடலோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் திடீரென உள்ளே புகுந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தால் அது அபிப்ராயம் ஆகிவிடுமா? ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒரு ஊடகத்தின் செயல்பாடு பற்றி பேசினால் எல்லோரையும் பற்றி பேசு என்று கேட்பது விமர்சனத்தின் குறைந்த பட்ச தர்க்கம்கூட தெரியாத நபர்களின் செயல்பாடு.

என்னை மக்களுக்காக அர்பணித்துக் கொண்ட மகாத்மா இல்லை என்று சாடுகிறீர்கள். நான் என்னை ஒரு நாளும் அப்படி அழைத்துக் கொள்ள மாட்டேன். அத்தகைய முகமூடிகள் எனக்கு அவசியமும் இல்லை. ஒரு எழுத்தாளனின் வேலையை மட்டுமே நான் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு கேள்வி கேட்கிற நீங்கள் சமூகத்த்திற்காக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? சொந்த வேலைகள், அலுவல் பணிகள் போக எஞ்சிய நேரத்தில் யாரையாவது பார்த்து நீ என்ன மகாத்மாவா என்பது போன்ற மகத்தான கேள்விகள் கேட்பது தவிர?

மனுஷ்ய புத்திரன்

HAMEED ABDULLAH said...

THAANGAL "MANA ULACHALUKKO KOBAP PDUMALAVUKKO" AVAR(Sadhyam) ETHUVUM SOLLAVILLIYE? THAANGAL KAVANIKKA THAVARIYA ALLATHU SOLLAAMAL VITTA ORUK KONATTHAI SUTTIK KATIYATHU THAVARAA?ENNA?

Anonymous said...

//இவ்வளவு கேள்வி கேட்கிற நீங்கள் சமூகத்த்திற்காக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?//

ஆகா! என்ன புத்திசாலித்தனமான எதிர்க் கேள்வி!

//என்போன்றோரை சுயமைதுனம் செய்பவர்கள் என்ற உங்கள் கருத்து உங்கள் மனவிகாரத்தையும், நேர்மையின்மையையும் காட்டுவதாக கருதுகிறேன்.//

அப்படிப் போடுங்க அருவாளை.

சதயம் said...

விமர்சனத்தின் குறைந்தபட்ச தர்கம் பற்றி பிரதாபம் பேசும் நீங்கள் ஏன் விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி என்று யோசிக்க மறுக்கிறீர்கள்.உங்களுக்கு ஏதோ ஒரு mentel block....தவிர்க்க முயற்சியுங்கள், இன்னும் உயரங்களுக்கு போகலாம்.

மற்றபடி இந்த வலைப்பூ பதிவுகள் எங்களைப் போன்ற அரைவேக்காட்டு(!) படிப்பாளர்கள்/எழுத்தாளர்களுக்கானதுதான், இங்கே நாங்கள் யாரும் எங்கள் எழுத்துக்களையோ, கற்பனைகளையோ விற்றுப்பிழைக்காதவர்கள். நீங்கள் பத்தாண்டு எழுத்தாளராய் இருக்கலாம், ஏன் பெரிய பனங்கொட்டையாகக் கூட இருக்கலாம் அதற்காக இங்கே பதிவிடுபவர்களையோ...பின்னூட்டமிடுபவர்களையோ அவர்தம் படிப்பு/எழுது திறனை மலிவாக மதிப்பிட வேண்டாம்.

G.Ragavan said...

நண்பர்களுக்கு, எந்த விஷயத்தையும் இரண்டு விதமாகவும் பேசலாம். ஆகையால் கொஞ்சம் நாகரீகமாகவும் பேசுங்கள்.

சதயம் said...

பனங்கொட்டை என்கிற வார்த்தை நிச்சயமாக காயப்படுத்தும் தொனியில் எழுதப்பட்டதல்ல....எங்கள் ஊர் பக்கம் காய்ந்த பனங்கொட்டையின் நாரை சீவி மூக்கு கண் வரைந்தால் பார்க்க ஐன்ஸ்டீன் மாதிரி இருக்கும். அதனால் அறிவாளிகளை நகைச்சுவையாக பெரிய பனங்கொட்டைன்னு நினைப்போ என்பது வழக்கம்...அவ்வளவே...காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன்

சதயம் said...

இனியும் இந்த வாத விவாதங்களை தொடர விரும்பவில்லை....வார்த்தைகள் கருத்துக்களில் இருந்து விலகி தனிநபர் விமர்சனமாக போவதில் எனக்கு விருப்பமில்லை....பிரிதொரு பதிவில்/பின்னூட்டத்தில் சந்திப்போம் நன்பரே....No hard feelings...ok...takecare

Ram.K said...

எனது வியப்புகள்:

1.விவாதம் சடாரென தனிமனிதர்
மேல் குவிவது.

2. பிரபலம் எழுதும் பதிவுகளுக்கு
பின்னூட்டம் அதிகமாக
இருக்கிறது.
பதிவு சாதாரணமாக இருந்தாலும்.

3. அதிலும் பாராட்டலைவிட வசவு
மூலம் அப்பிரபலத்தின் கவனத்தை
ஈர்க்க முயல்வது வேடிக்கை.

பலே, ஜோர், பிரமாதம் எனச்
சொல்வதில் என்ன ஈர்ப்பு
இருக்கிறது?

:))

ஒரு நிகழ்வை, நிறுவனத்தை விமரிசிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வை. கோணங்கள் மாறலாம். ஆனால், அது பதிவிடுபவரை [பதிவிடுபவர் யாராக இருந்தாலும் (பிரபலமாக இருந்தாலும்)]நோக்கி சுட்டுதலாக, உள் நோக்கம் கற்பிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

இது எனது பார்வை.

சுரேஷ் கண்ணன் said...

அன்பு மனுஷ்யபுத்திரன்,

இந்தப் பதிவிற்கு சம்பந்தமில்லாத செய்தி.

நவம்பர் 2005 உயிர்மை இதழில் மறைந்த சு.ரா பற்றின நினைவுக்குறிப்புகளை வெளியிட்டமைக்கு நன்றி. இதில் உங்களின் பதிவு சுயஒப்புதலுடனும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஜெயமோகனின் அந்த நெடுங் கட்டுரையில் சு.ரா பற்றின பல புள்ளிகள் இறைந்திருப்பதைக் காண முடிந்தது. அவற்றை நுண்ணுனர்வோடு இணைத்துப் பார்த்தால் சு.ரா பற்றின அசலான பிம்பம் ஒருவேளை கிடைக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இதழை கனமாக கொண்டு வந்ததற்கு பாராட்டும், நன்றியும்.

- சுரேஷ் கண்ணன்.

Vaa.Manikandan said...

//மற்றபடி இந்த வலைப்பூ பதிவுகள் எங்களைப் போன்ற அரைவேக்காட்டு(!) படிப்பாளர்கள்/எழுத்தாளர்களுக்கானதுதான்,//

இந்த ஊடகம் அரைவேக்காடுகளுக்கு என்று யார் சொன்னது நண்பரே?

மரைக்காயர் said...

சாகுல் அமீது சார்,

சன் டிவி வன்முறையை விட தீவிரமான வன்முறை ரத்தமும் எலும்பும் சிதற, முஸ்லீம்கள் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து தீபாவளி விற்பனை கூட்டத்தில் 60 பேரை பிய்த்து எறிந்திருக்கிறார்கள்.

வழக்கம்போல ஒரு தீவிரவாதிகளை எதிர்த்து பதிவாவது போடுவீர்களா? அதன் மூல காரணங்களை ஆராய்வீர்களா?

இதையும் பாருங்கள்
"பிடரிகளின் மீது வெட்டுங்கள். விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" 8:12

Anonymous said...

//முஸ்லீம்கள் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து தீபாவளி விற்பனை கூட்டத்தில்//
என்ன ம'றை'க்காயரே,
தீபாவளிக்கு நான்கு நாள் கழித்துதான் இரம்ஜான்! முஸ்லீம்கள் மட்டும் விற்பனைக் கூட்டத்தில் இருந்திருக்க மாட்டர்களா?
குண்டு வைத்தவர்களை ஒத்த மூடத்தனமய்யா இது!

Anonymous said...

சுரேஷ் கண்ணன் சார், சு.ராவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்ததுமே ஜெயமோகன் .யிர்மைக்கு அந்த நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான வஞ்சப் புகழ்ச்சி கட்டுரையை எழுதத் தொடங்கிவிட்டாராமே!