Sunday, October 16, 2005

சுராவின் மறைவும் இருப்பும்

(சுரா மறைந்த நான்கு மணிநேரத்திற்குப் பிறகு அதைபற்றிய முதல் பதிவினை உயிர்மை பதிவினில் அளித்தேன். அது தென்பட்டு மறைந்துபோனதாக திரு.பத்ரி தனது வலைப்பதிவினில் குறிப்பிட்ட பிறகே எனக்கு அது காணமல் போனது தெரியும். அது இப்போது அவ்வளவு முக்கியமல்ல. செய்தி அறிந்த முதல் கணத்தில் தோன்றிய குழப்பமான நடுங்கும் சொற்களை நான் மறுபடி இட விரும்பவில்லை. ஒரு வார இதழுகாக அளித்த அஞ்சலிக் குறிப்பினை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.

இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.


சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.

தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.

சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.

சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.

சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

3 comments:

Anonymous said...

Pakistan: 16 Muslims reportedly gang rape Christian girl

Pakistani pre-teen refused to renounce faith during assault

By Jeremy Reynalds
October 5, 2005

A 12-year-old Christian girl was reportedly abducted and gang raped by 16 Muslim men in Pakistan.

The alleged offence occurred at Rawlpindi, bordering Pakistans capital city of Islamabad.

According to a news release from the All Pakistan Minorities Alliance (APMA), Sara Tabasum escaped two weeks later while she was being transported to a new location. APMA reported Tabasum managed to jump out of the vehicle and escape while it was on a busy road. Although the youngster was pursued, she still managed to reach her family.






In the last week of June, APMA reported, according to Tabasum and her family members, Perveen Bibi, a Muslim woman and her husband Babar, rented an apartment next to Tabasums house. Both families shared a single bathroom and main entrance door, APMA said.

It soon became evident to Tabasums family, APMA reported, by the amount of strangers coming and going that their new neighbors owned a brothel.

Tabasums mother and other neighbors complained to the owner of the apartment complex about the activities reportedly being carried on by their new neighbors. As a result, APMA reported, Bibi and her husband were ordered to immediately vacate the apartment. When Bibi found out that Tabasums mother had complained, she warned her that here would be consequences for her actions.

Bibi and her husband, APMA reported, moved their business to another area of the city.

On Sept. 5, APMA stated, Tabasum went out late one night to buy some loaves of bread. She was reportedly abducted by her former neighbors and two other men. According to APMA, "They put a piece of cloth soaked in some intoxicant on her mouth, after which she fainted."

When Tabasum regained consciousness she found herself in Bibis house, where three men reportedly including Babar Bibi, raped her.

Tabasum was reportedly told that by Perveen Bibi that she could be "saved" if she embraced Islam and married one of Perveens Muslim brothers.

According to APMA, "On refusing, Sara was beaten badly during captivity and shifted to another house ... where five persons raped her. She was repeatedly asked by Perveen and other men to embrace Islam and recite [the] Islamic creed to save herself from the misery. Perveens husband Babar even told her that they [had] killed her brother Suleman, and her mother [had] also embraced Islam. [With that in mind], it would be better for her to become [a] Muslim now, otherwise she could be killed or made [a] 'prostitute."

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

நான்கு நாட்களாக ஒன்றும் ஓடவில்லை. நான் அவரைச்சந்தித்ததில்லை. எனினும், அவரது படைப்புக்களை மட்டுமே மிகவும் விரும்பும் எனக்கு உன்னதமான ஒரு படைப்பாளியை இழந்துவிட்டோமே என்ற பெரும் மனவேதனை. அவரது கட்டுரைகளைத்தான் படிக்கத் துவங்கியிருக்கிறேன் மறுவாசிப்பாக. தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு !

Karunah said...

திரு.சு.ராவை ஒருதடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போய்விட்டதேயென்று அங்கலாய்ப்பாக
இருக்கிறது.
தனது இலக்கியக்கொள்கைகளில் தெளிவாகவும் தீவிரமாகவும் இருந்தவர் சு.ரா.
எனது முதல் வாசிப்பில் அவரது 'புளியமரத்தின் கதை' அவ்வளவாக ஈர்த்துவிடவில்லை. பின்னால் 'ஜே.ஜே. சில குறிப்புகள்'
என்னை அதிரப்பண்ணியது. எழுதிய காலத்திலிருந்து இன்றுவரை விமர்சிக்கப்பட்டுவருவது அந்நாவல்.
மிகசிறந்தது, சிறந்தது,சுமாரனது,
என்னும் வகைகளில் பல சிறுகதைகளை எழுதிய சு.ராவுக்குத் தன் படைப்புகளையிட்டு மிகைஅபிப்ராயங்கள் என்றுமே இருந்ததில்லை.
ஒரு கலந்துரையாடலின்போது "நானும் இருபது வருஷங்களாக எழுதிவருகிறேன், ஆனால் என்னை 20 வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை". என்றாராம். பின் தமிழரின் பிறப்புவீதம் எதுவாகவும் இருக்கலாம்........ ஆனால் தீவிர தமிழ்வாசகனின் பிறப்பு வீதம் ஆண்டுக்கு 200 க்கும் குறைவானதே" என்றுஞ் சொன்னாராம்.
" அவள் பார்க்கப் பார்க்கப் பார்க்கப் பெண்போலவே இருந்தாள்" என எழுதிய நகைச்சுவையாளனை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்ற என் ஆசை நிராசையானது. அவர் பிரிவை ஒப்ப மனம் மறுக்கிறது.

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.