கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான வரிசை முடிவற்று நீண்டிருந்தது. எங்கெங்கும் மனிதத் தலைகள். செல்போன் சிக்னல்கள் ஜாம் ஆகியிருந்தன. காரணம் பீச் வாலிபால். அதற்கு முந்தைய தினங்களில் பத்திரிகைகள் பந்துகளை அடிக்க பறக்கும் பெண்களின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டிருந்தன. வழக்கமான தின்பண்ட வியாபாரிகளுடன் குடை ராட்டினக்காரர்கள், பலூன் விற்பவர்கள் என திருவிழா வெளியாகியிருந்தது. ஆஹா FMமிலிருந்து நேரடி விநாடி வினா நிகழ்ச்சிகள் ஒலிப்பெருக்கியில் அதிர்ந்துகொண்டிருந்தன. . ஒரு எட்டுவயது சிறுமி கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிய அவளது தகப்பனோ அல்லது வேறு யாரோ காசு வாங்கிக்கொண்டிருந்தார். குரங்கு வித்தை காட்டுபவனும் குரங்கும் கண்களில் பஞ்சடைந்து சோர்ந்து நடந்துகொண்டிருந்தார்கள். ஏராளமான பையன்கள் ஏராளமான பெண்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏராளமான பெண்கள் ஏராளமான பையன்களால் தாங்கள் பார்க்கப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கெங்கும் தற்காலிகமான சிறு கடைகள்....................
கட்டுரையை முழுமையாக படிக்க உயிர்மை வலைத் தளத்தில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு... http://www.uyirmmai.com/