Wednesday, August 06, 2008

சைக்கோ கொலைகாரன் யார்?

சென்னையில் கடந்த சில வாரங்களாக இரவுக் காவலாளிகள், மற்றும் தெருக்களில் தூங்குபவர்கள் பலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருவது ஒரு திகில் கதையாக மாறிவிட்டது. இந்த திகில் கதையின் வசனங்களின் ஒரு பகுதி ஊடகங்களாலும் இன்னொரு பகுதி போலீஸாராலும் எழுதபட்டு வருகிறது. 'சைக்கோ கொலைகாரன்' என்ற ஒரு கற்பனை பாத்திரத்தைத் தேடி மொத்த நகரமும் அலைந்து கொண்டிருக்கிறது. குற்றத்தின் பின்னே இருக்கும் நோக்கங்கள் அல்லது ஆதாயங்கள் வெளிப்படையாகத் தெரியாத குற்றங்கள் அனைத்தும் உளவியல் சார்ந்த மர்மக் குற்றங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில் ஒரு 'சைக்கோ கொலைகார'னின் கதாபாத்திரம் இல்லாவிட்டால் குற்றம் குறித்த எல்லாக் கற்பிதங்களும் கலைந்துவிடும். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி மொத்த சமூகத்தையும் பாதுகாப்பற்றதாக்கிவிடுகிறான். மிகக் கொடூரமான குற்றவாளி என்று அறியப்பட்ட ஒருவனது இலக்குகள் குறித்துக்கூட உத்தேசங்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் குற்றங்கள், அறியப்படாத நோக்கங்கள் கொண்ட குற்றங்கள் ஏற்படுத்தும் பதட்டம் மொத்த சமூகத்தையும் நோய்க்கூறு கொண்டதாக்கிவிடுகிறது. பீதியையும் பிறர்மீதான அச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் இனவாத மதவாத அமைப்புகளாகட்டும், ஊடகங்களாகட்டும் அவை ஒரு சமூகத் திரளுக்கு பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகின்றன. இந்த உலகின் மிகப் பெரிய கொலைக் கருவி எதுவென்றால் அது அச்சம்தான். அச்சத்தினால் பிறழ்வு கொண்ட ஒரு தனிமனிதனின், சமூகத்தின் பிறருக்கு எதிரான குற்றங்கள் தடுத்து நிறுத்த முடியாதவை. ..........

இந்தக் கட்டுரையை தொடந்து வாசிக்க உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களுக்கு வாருங்கள்.....http://www.uyirmmai.com/