Wednesday, July 01, 2009

தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?

இன்று காலை கணினியை திறந்ததும் முத்துக்கிருஷ்ணன் சாட்டில் வந்து இதைப் படிங்க முதல்ல என்று இரண்டு இணைப்புகளை தந்தார். அது கவிஞர் தேவேந்திரபூபதியின் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கு பற்றி கவிஞர் தமிழ்நதி தனது வலைப்பூவில் எழுதிய இரண்டு பதிவுகள்.

http://tamilnathy.blogspot.com/
http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html
கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்......
கட்டுரையை தொடர்ந்து வாசிக்க.....
http://www.manushyaputhiran.uyirmmai.com/

2 comments:

Anonymous said...

ஐயா மனுஷ்யபுத்திரன் அவர்களே தமிழக முதலவரே ஈழத்தமிழருக்கு ஒன்றுமே செய்யவில்லை. தங்களுக்குள் சண்டையிடும் இந்த எழுத்துவியாபாரிகளா செய்யப்போகின்றார்கள். ஜெயமோகனும் சாருநிவேதாவும் கண்கெட்ட பின் எதோ பிதாற்றினார்கள். கவிஞர் தாமரையும் சில சினிமாக்காரர்களும் மட்டும் அன்றையிலிருந்து இன்றைவரை ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள்.

கையேடு said...

மேலும் வாசிக்க எனும் சுட்டியில் உயிர்மையின் முகப்புப் பக்கத்திற்கான சுட்டியைத் தருவதால் முகப்பில் வந்து அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைத் தேடவேண்டியிருக்கிறது.

அதற்கு பதிலாக இனி வரும் இடுகைகளில் குறிப்பிட்ட கட்டுரையின் முழுச்சுட்டியையும் மேலும் வாசிக்க என அளித்தால் எளிதாகயிருக்கும்.

நன்றி