Thursday, October 27, 2005

சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை

சென்னையில் பேய் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறையினராலும் நாசமாக்கபட்ட சாலைகளில் தண்ணீர் வடிய வசதியின்றி ஜனங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். வீடுகளில் தண்ணீர் வந்தது பற்றி நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்துவருகின்றனர். சில பகுதிகளில் முழங்கால்வரை தண்ணீர் ஓடுகிறது என்றும் தெரிவித்தனர். காலையில் ஒன்பது மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தபட்டு மாலை நான்கு மணிக்கு மீண்டும் வந்தது. அவ்வளவுதான் பிடித்தது சனியன். சன் டிவியில் சென்னையே பிரளயத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அலறல். நேரடி ஒளிபரப்பில் அதன் செய்தியாளர்; அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் மக்கள் நடுங்குவதாக தெரிவிக்கிறார். அப்புறம் மும்பை மழையை விடக் கடுமையாக மழை பெய்யப் போகிறது என்று பயமுறுத்துகிறார். வானிலை அதிகாரியின் பேட்டியில் அப்படி எதுவும் இல்லை. கார்பரேஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்களா என்று ஸ்டுடியோவிலிருந்து தொகுப்பாளர் கேட்கிறார். நடவடிக்கை எடுத்தார்கள், ஆனால் எந்த அளவுக்கு எடுத்தார்கள் என்று தெரியவில்லை என ஆரம்பித்து உடனடியாக மக்களின் அவதியை ஆளும் கட்சிக்கு எதிராக ஆதாயமாக்கிக் கொள்ளும் முயற்சி...

இது போன்ற நெருக்கடியான சந்தர்பங்களில் மக்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் தேவை. ஆனால் செய்திகள் மிகைப்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை பீதி ஊட்டும் வகையில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. வதந்திகள் பெருகுகின்றன.

சுனாமியின்போதும் இதுதான் நடந்தது. ஊடகங்களின் வன்முறை நமக்குப் புதிதல்ல. ஆனால் எப்போதும் அவை மக்களுக்கு மேல் பிணந்தின்னிக் கழுகாக பறந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன?

நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

33 comments:

Narain Rajagopalan said...

//நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை. //

:))))))

Vaa.Manikandan said...

//நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை. //

டி.வி-ஐ அணைத்துவிட்டு தூங்கிவிடுங்கள்.அவ்வளவுதான்! :)

Vaa.Manikandan said...

//நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை. //

டி.வி-ஐ அணைத்துவிட்டு தூங்கிவிடுங்கள்.அவ்வளவுதான்! :)

வானம்பாடி said...

ஜெயா டிவி பாருங்கள். மக்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகள் காண்பிக்கப்படும். ;) அல்லது டிவியை அணைத்துவிட்டு 'ஆல் இண்டியா ரேடியோ' கேளுங்கள். நிஜ சன் வரும் வரை இந்த 'சன்'னை கடக்க இதுதான் வழி.

Anonymous said...

மணி ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் போல் சொல்லிவிட்டீர்!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சன் மட்டும் இல்லை. நம்ம ஊரில் பெரும்பாலான ஊடகங்களுக்கு பொறுப்பில்லை. பரபரப்பு பண்ணினால் போதும் என நினைக்கிறார்கள். இலண்டன் குண்டுவெடிப்பின் போது சி. என். என். காரர்கள் விடிய விடிய குண்டுவெடிப்பு தளம் அருகே இருந்தே ஒளிபரப்பு செய்து நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று மக்கள் மனதில் நம்பிக்கை விதைத்தார்கள். அந்த மாதிரி எல்லாம் இங்கு எப்பொழுது நடக்கும் என தெரியவில்லை

Anonymous said...

அட !! இதையாவது சொல்லுறாங்களே. விடுங்கப்பா, சுனாமி வந்து உலகத்தில இருக்கிற அனைத்து டிவியும் காட்சிகாட்ட... சன் மட்டும் நல்ல படம்போட்டிச்சே....

Unknown said...

மழை நீர் சேமிப்பு பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்வை கொண்டுவந்ததற்காக முதல்வரைப் பாராட்டத்தான் வேண்டும். என்னதான் இருந்தாலும் நமது நகர அமைப்புகள் சரியானவை அல்ல. இன்னும் திட்டமிடல் வேண்டும். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் இந்த நேரத்திலாவது பொறுப்புணர்ந்து செயல்பட்டால் நல்லது. இப்போதும் மக்களுக்கு ஊக்கமும் நம்பிகையும் தராமல் சும்மா எரிகின்ற வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல் ஆளும் கட்சிமீதும் அரசுத்துறையின் மீதும் குற்றம் சொல்ல நேரம் "இதுவல்ல".

அரசியல் மாநாட்டுக்கும்,சினிமா எதிர்ப்பு,குஷ்பூ எதிர்ப்பு,தமிழ் ஆதரவு,தலைவர்/தலைவியின் பிறந்த நாள் விழாக்களுக்கு ஆள் அம்பு திரட்டும் "எல்லா" அரசியல் கட்சிகளும் உண்மையிலேயே, கண்ணுக்கு எதிரிலேயே தண்ணீரில் தவிக்கும் இந்த நேரத்தில் களம் இறங்க வேண்டாமா? அறிக்கை மட்டும் போதுமா?

யாரை நோவது?

கார்த்திக்ராம்ஸ் சொன்னது....
http://karthikraamas.net/pathivu/?p=99
//இந்த மழையிலும், கஷ்டம் பாராமால் வேலை செய்து ஆபத்துக்களையும் , நமது கஷ்டங்களையும் போக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர், அவர்களுக்கு நன்றி.//

உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.

தாணு said...

ஊடகங்களின் அத்துமீறல் அநாவசிய பீதியைத்தான் கிளப்புகிறது. ஒருபக்கம் பேசத் தெரியாமல், என்ன விஷயமாக கெள்வி கேட்கப்படுகிறதுன்னு கூட போறவங்களைப் பிடிச்சு பேட்டீன்னு சொதப்புற சன் டிவி; இன்னொருபக்கம் , மக்கள் எந்த அவதிக்கும் ஆளாகாமல் அன்றாட அலுவல்களில் இருப்பதாக பொய் முகம் காட்டும் ஜெயா டிவி;
மணிகண்டன் ஆலோசனை தான் கரெக்ட்

Anonymous said...

That was a good post. I too feel the same when Sun TV hypes the flood situation and Jaya TV brings out the totally opposite version.

It is better to ban these two channels for the good of the state.

Vijayakumar said...

நல்ல வேளைப்பா... மின்சாரம் இல்லாததால் சன் டிவி பார்த்து பீதியும் பேதியும் இல்லை.

அருள் குமார் said...

சுனாமியின் போது நிகழ்ந்த ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது...

சன் செய்திகள் நேரடி ஒளிபரப்பில் ஒருவர்..." அய்யோ... அலை வேகமா வருது... நாங்க உயிருக்கு பயந்து ஓடுரோம்..." என்கிற ரீதியில் அலறுகிறார்.

நேரடி ஒளிபரப்பு செய்தியாளர்... "இப்போ உயிருக்கு பயந்து ஓடிகிட்டு இருந்த ஒருத்தரை நிறுத்தி பேசச்சொன்னேன்..." என்கிறார்.

"சாமிநாதன்.. நீங்க எங்க இருக்கீங்க... safe-ஆ இருக்கிங்களா...?" - என்று ஸ்டுடியோவிலிருந்து தொகுப்பாளர் கேட்கிறார்.

"நான் மிகப்பாதுகாப்பாக இருக்கிறேன். இராணி மேரி கல்லூரி அருகில் ஒரு water tank-மேலே இருந்துதான் பேசறேன்..." என்கிறார்.

"water tank மேல நின்னு எப்படிடா உயிருக்கு பயந்து ஓடினவனை நிறுத்தி பேச சொன்ன..." - என்று அதிசயிக்கிறோம் நாங்கள்!!!

Ramya Nageswaran said...

சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற ஒரு தன்னார்வத் தொண்டூழியர் ஒரு மடல் எழுதினார். விவசாயி ஒருவரை பேட்டி கண்டதாம் ஒரு தனியார் தொலைக்காட்சி. அவர் "என்னுடைய இரண்டு மாடுகள் செத்துவிட்டன!" என்று சொன்னாராம். அதற்கு நிருபர் "காமெரா ஓடும் பொழுது இருபது மாடுகள் என்று சொல்லு" என்றாராம். அந்த விவசாயி "இந்த கிராமத்திலேயே 20 மாடுகள் யார் கிட்டேயுக் இல்லைங்க. எப்படிங்க சொல்றது?" என்றாராம். இப்படிப்பட்ட செய்திகளைப் பார்ப்பது தானா நம்முடைய தலையெழுத்து?

Sundar Padmanaban said...

இரு துருவங்களாக இரு பெரும் சக்திகள் தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வரை இந்நிலை மாறப் போவதில்லை.

நடுநிலை என்பதே கேலிக் கூத்தாகி விட்டது.

மக்களின் சிந்தனையை மழுங்கடிப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை ஜெயாவும் சன்னும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.

இங்கு பிபிஸியும் சிஎன்என்னும் அடித்துக்கொண்டே இருந்தாலும் Weather Channel போன்று மக்களுக்கு தட்பவெப்பத்தினைப் பற்றிச் சரியான தகவல்களை சரியான நேரத்தில் எடுத்துரைப்பதற்கு ஊடகங்கள் இருக்கின்றன. அரசு நடத்தும் ஊடகங்கள் இன்னும் உள்ளரங்கத்திலிருந்தே வெளியில் வரவில்லை.

இயற்கைச் சீற்றங்கள் தென்னகத்தில் குறைவு என்பதாலோ என்னவோ இது போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள மக்கள் தயார் நிலையில் இல்லை. அது குறித்த எந்தவித பயிற்சிகளும் இல்லை. அடிப்படை அறிவும் இல்லை.

திருச்சியில் காவிரியில் வெள்ளம் பொங்கிக் கொண்டிருக்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் பாலத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் - விபரீதம் புரியாமலே. பழைய பாலங்கள். எந்த அளவு வலுவாக இருக்கின்றன ; உடைந்தால் என்ன ஆகும் என்று யாருக்கும் யோசிக்கத் தோன்றவில்லை.

சென்னையில் சாலைகளில் இடுப்பளவு தண்ணீரில் நீச்சலடிக்கும், நடக்கும் மக்களின் புகைப் படங்களைப் பார்த்தேன். ஒரு மின் கம்பி விழுந்தால் என்ன ஆகும் என்பதையோ, ஏதாவது பாதாளச் சாக்கடை திறந்திருக்கலாம் என்பதையோ உணராதவர்களாக - விளையாட்டாக இருக்கிறார்கள்.

இம்மாதிரி சமயங்களில் பீதியைக் கிளப்பாமல் - அதே சமயத்தில் மக்களை எச்சரித்து - முன்னேற்பாடுகள் குறித்த செய்திகளை நிலைமை சரியாகும் வரை தொடர்ச்சியாகத் தருவதே ஊடகங்களின் கடமை.

அது சரி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்பவர்களிடம் என்ன பேசுவது?

எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, களமிறங்கிப் பணி செய்த அனைத்து மனிதர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

சுந்தர்.

Anonymous said...

Dinakaran nilum athethan AEnthaan Ivarkal Ippadiyellam Seykirarkalo....Intru Matthiya amaichar Thayanithi maaran Pathippukali parvai iduvathaik kattinarkal...Ore sirippumayam....Dinakaran nalithalil Pathikkappatta pakuthikalai Jayalalithaa paarvai idum photo sirtthamukatthudan iruppathaay......Arasiyal.....?

Vaa.Manikandan said...

//சுனாமி வந்து உலகத்தில இருக்கிற அனைத்து டிவியும் காட்சிகாட்ட... சன் மட்டும் நல்ல படம்போட்டிச்சே.... //

அட நீங்க வேற,
நான் பாட்டுக்கு சிவனேனு அபிராமபுரத்தில் என் நண்பர் :) வீட்டில் டி.வி பார்த்துட்டு இருந்தேன். சன் டி.வி அலறதுனல பயந்து ஊருக்குப் போனவன் ,ஒரு வாரம் கழிச்சு வந்து சேர்ந்தேன்.இன்னும் அவரின் உறவுப் பையன் சுனாமி பார்ட்டினு நக்கல் அடிக்கறானாம்.

Anonymous said...

"உள்ளூர் வயித்தெறிச்சல் கோஷ்டி"

அடங்கொக்க மக்கா(கவுண்டமணி பாணியில்)

Anonymous said...

இங்கு பிபிஸியும் சிஎன்என்னும் அடித்துக்கொண்டே இருந்தாலும் Weather Channel போன்று மக்களுக்கு தட்பவெப்பத்தினைப் பற்றிச் சரியான தகவல்களை சரியான நேரத்தில் எடுத்துரைப்பதற்கு ஊடகங்கள் இருக்கின்றன. அரசு நடத்தும் ஊடகங்கள் இன்னும் உள்ளரங்கத்திலிருந்தே வெளியில் வரவில்லை.

கிளம்பிட்டங்கய்யா பொஸ்ரனிலிருந்து...

Anonymous said...

இதான் சாக்குன்னு தலையங்கம் எளுதிட்டாரு அண்ணன் சுந்தரு!

Anonymous said...

பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதை நிறுத்தி விட்டு சன் டிவி பற்றி கண்ணீர் விடலாம்.

Sundar Padmanaban said...

அன்பின் அனானிமஸ்,

//கிளம்பிட்டாங்கய்யா பொஸ்ரனிலிருந்து//

பாஸ்டனிலிருந்து எழுதியது தவறா?

ஐயா, நான் பட்டுக்கோட்டையில் இருந்திருந்தாலும்

//இம்மாதிரி சமயங்களில் பீதியைக் கிளப்பாமல் - அதே சமயத்தில் மக்களை எச்சரித்து - முன்னேற்பாடுகள் குறித்த செய்திகளை நிலைமை சரியாகும் வரை தொடர்ச்சியாகத் தருவதே ஊடகங்களின் கடமை//

என்றுதான் குறிப்பிட்டிருப்பேன்.

நன்றி.

Sundar Padmanaban said...

அன்பின் அனானிமஸ்,

//இதான் சாக்குன்னு தலையங்கம் எளுதிட்டாரு அண்ணன் சுந்தரு!//

தலையங்கமோ காலங்கமோ, பின்னூட்டம் எழுதுவதற்கு சாக்கு எதாவது வேண்டுமா என்ன?

முகம் தெரியாமல் போர்த்திக்கொள்ளத்தான் சாக்கு வேண்டும். எனக்கது தேவையில்லை.

சன்னோ, ஜெயாவோ ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் உண்மைக்குத் திரிபாகச் செய்திகளை - அரசியல் கட்சி சார்ந்து வெளியிடுகின்றன - இந்நிலை மாறவேண்டும். கட்சி சார்பற்ற ஊடகங்கள் வந்தால்தான் இது சாத்தியம்.

நன்றி.

G.Ragavan said...

உண்மை தெரிந்தும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தவறுதான். நான் சன்னிலும் ஜெயாவிலும் செய்திகளே பார்ப்பதில்லை. எப்பொழுதாவது பார்த்தால் அது தூர்தர்ஷனில் இருக்கும். இல்லையென்றால் என்.டி.டீ.வியில் எப்பொழுதாவது பார்ப்பதுதான்.

மேலே ஒரு நண்பர் சொன்னது போல, பரங்கிமலை ஜோதியில் திருவிளையாடலையா எதிர் பார்க்க முடியும்!

Anonymous said...

பரங்கிமலை ஜோதியில் திருவிளையாடலையா எதிர் பார்க்க முடியும்!
we can expect thiruvilayadal starring dhanush there

ஜோ/Joe said...

//we can expect thiruvilayadal starring dhanush there//
he he..really funny comment.

G.Ragavan said...

// we can expect thiruvilayadal starring dhanush there //

ஐயோ! பெயரிலி....வயிறு வலிக்குதே...சிரிச்சி..சிரிச்சி...

Anonymous said...

good. sinthanaya thundoom katturai

Anonymous said...

All news items are looked at from the aim of spinning it to their advantage[both channels are using the same technique] and whatever independent channels which existed were prevented to telecast news with help of law. Worst part is that these 24 hour news channels keep repeating the same footage every half hour giving impression that it is happening for long time. One way to curtail it is have the channels show the time in which the images were taken with date like camcorders to avoid re-running same news/clips and unnecessarily scaring people.

Anonymous said...

In this electronic era nobody is going to get scared by watching TV news. In which world are you living?

Please don't write such stupid posts just to attracts responses.

There is a tendency in blogs to blame SUN TV for everything. Stop that once & for all. I pity all those people who responded to this post as if the whole world came crumbling because of SUN TV News!

HOW STUPID!!

Anonymous said...

சன் தொலைகாட்சி ஒரு தரங்கெட்ட தொல்லைகாட்சி
வடையை எண்ணச் சொன்னால் பொத்தலை எண்ணக்கூடியவன்

Anonymous said...

தனியார் தமிழ் டி.வி. சானல்களில் அதிக பிரபலமானதும், பழமையனதுமான சன் டி.வி. ஒரு தமிழ் எலெக்ட்ரானிக் ஊடகங்களின் முன் மாதிரியாக (தரத்திலும் மற்றும் வியபார கண்ணியத்திலும்) திகழ அதிகத்தார்மீகப் பொறுப்புகள் உள்ளதன. ஆனால்,அது மிகவும் தரம்கெட்ட முழுக்க முழுக்க வியபாரம் ஒன்றே குறியாகவும் அதற்காக எதையும் சமரசம் செய்துகொள்ளவும், குடும்பத்தினரின் அரசியல் கட்சிக்கு ஒரு official mouthpiece ஆகவுமாகவே இயங்கி வருகிறது. அதன் பின்புலத்தில் ஒரு பெரிய அரசியல்கட்சியின் அதிகாரக் கட்டமைப்பும் பணபலமும் உள்ளன. இச்சூழலில் அதன் நடைமுறைகளை விமர்சனம் செய்வது நம் ஒவ்வொருவரின் ஜனநாயகத்தொண்டென்றே கொள்ள வேண்டும். இதில் உள்நோக்கம் கற்பிப்பதை நாம் இன்றைய தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலின் வக்கிரத் தாக்கம் என்றே கொள்ள வேண்டும்.

Anonymous said...

dear anony,

to say this very good advice why u r coming as anony?

வல்லிசிம்ஹன் said...

Ippothaavathu intha pathivu paarkka mudinthathai ninaithu santhosham.thank you manushya puthran. we were so upset when we saw all these broadcasts. we were abroad at this time and naturally worried about every body home(near and dear) and made ISD calls just to make sure of their safety. and then knew abt this absurd broadcasts.