Saturday, November 26, 2005

சுந்தர ராமசாமி நினைவரங்கு : சொல்லின் கால் தடங்கள்

Image hosted by Photobucket.com

நாள்:27.11.2005 காலை 10 மணி முதல் ஒரு மணிவரை
இடம்:தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, (ஆனந்த் திரையரங்கம் அருகில்)
சென்னை

நூல் வெளியீடு

ஜெயமோகனின்
சுந்தரராமசாமி:நினைவின் நதியில்

வெளியிடுபவர்:ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்:பாலு மகேந்திரா

சிறப்புரைகள்:
கல்பற்றா நாராயணன்
ந.முத்துசாமி
எம்.யுவன்
கே.எம்.ஆதிமூலம்
நாஞ்சில் நாடன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
சி.மகேந்திரன்
ஒருங்கிணைப்பு: மனுஷ்ய புத்திரன்.



உயிர்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு:


email:uyirmmai@gmail.com
phone:044-24993448
mobile:9444366704

7 comments:

Voice on Wings said...

//தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, (ஆனந்த் திரையரங்கம் அருகில்)//

பதிவுக்கு சம்மந்தமில்லாத கருத்து - ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு வழி கூற ஒரு திரையரங்கின் பெயர் தேவைப்படும் நிலையில்தான் நம் சமூகம் உள்ளது என்பது வருத்தமான ஒரு செய்தி.

கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

Vaa.Manikandan said...

ஒரு மாபெரும் கவிஞனை(படைப்பாளி)ப் பற்றிய நினைவுகள் கொண்ட புத்தக வெளியீடு "கூச்சல்"களின் மத்தியிலும் இனிதே நடைபெற வாழ்த்துகள்.

ஜெ. ராம்கி said...

voice on wings,

ஆரம்பிச்சுட்டீங்களா? தேவநேய பாவாணர் மாவட்ட நூலகத்துக்கு பக்கத்திலே இருக்குது ஆனந்த் தியேட்டர்னு சொல்றதும் கேவலமாகத்தானே இருக்குது!

Anonymous said...

ஒரு மாபெரும் கவிஞனை(படைப்பாளி)ப் பற்றிய நினைவுகள் கொண்ட புத்தக வெளியீடு "கூச்சல்"களின் மத்தியிலும் இனிதே நடைபெற வாழ்த்துகள்.

மணிகண்டன் கூட்டத்தில் பேசுவதே கூச்சல் என்கிறாரா. புத்தக வெளியீட்டு விழா நினைவுக் கூட்டம் என்ற பெயரில் நடக்கிறது,ஐயா அவ்வளவுதான் விசயம்.

Anonymous said...

டி.வி.எஸ் எதிர்ப்புறத்தில் என்றுக்கூடச் சொல்லலாமே.ஆனந்த் தியேட்டர் இலக்கியவாதிகளுக்கு மிகவும் பழக்கமுள்ளதால் ஆனந்த் தியேட்டர் அருகில் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
அட என்னடா பொல்லாத புத்தக விழா
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

Anonymous said...

தமிழ்நாடு வெள்ளத்தில் திண்டாடுகிறது, சென்னையிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு போவதும், அங்கிருந்து இங்கு வருவதும் மிகக் கடினமாக இருக்கும் போது புத்தக வெளியீடு
விழா நடத்துகிறீர்களே, உங்களுக்கு மக்கள் துன்பம் தெரியாதா . மக்கள் இப்படி அல்லல்படும்
போதும் நினைவஞ்சலி என்று பெயர் போட்டுக் கொண்டு வியாபாரம் பண்ணும் மனது இலக்கியவாதிகளுக்கு மட்டுமே இருக்கும். இதை நிலைமை சீரான பின் வைத்தால் குடியா மூழ்கிப் போய்விடும். அவனவன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கையில் புத்தக வெளியீட்டு விழா நடத்த வெட்கமாகயில்லையா உங்களுக்கு. நீங்களும், உங்கள் இலக்கியமும், இழவு வீட்டிலும் புத்தக வியாபாரம் நடத்தும் உங்கள் புத்தியும்

Vaa.Manikandan said...

தமிழ்மணம் பகுதியில் மீண்டும் தங்களின் பதிவினைக் காண்பதில் மகிழ்ச்சி.

இந்த மாதம் தங்களின் பிறந்த நாள் வருகிறது அல்லவா? வாழ்த்துக்கள்.

அன்புடன்
மணிகண்டன்.