யாருடைய முத்தங்களும்
யாருக்கும் நினைவிருப்பதில்லை
கசப்பின் சின்னஞ் சிறுகீறல்
உங்ளங்கை ரேகையாகப் படிந்து
நம் விதியை எழுதுகிறது
எல்லாப் பரிசுப்பொருட்களும்
எப்படியோ பழசாகிவிடுகின்றன
புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன
எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்
நீ என்னிடம் வரும்போது
ஒரு பறைவையின் சிறகுகளோடு வருகிறாய்
போகும்போது
புகைபோக்கியின் வழியாக
ஆவியாகிச் செல்கிறாய்.
மனுஷ்ய புத்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன
எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்//
வாழ்க்கைக்குகைக்குள் மறைந்துகொண்டிருக்கும் சில ரகசியங்களை சொல்லுகின்றனவோ இந்த வரிகள்...
மிக்க நன்றி மனுஷ்யபுத்ரன் சார்...
அன்புடன்
கார்த்திகேயன்
unga kavithai arumai-kirubha email kiru_74@yahoo.co.in my kavithaikal at www.moderntamilworld.com
//எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்//
எல்லாருக்கும் இப்படி அனுபவம் இருக்கிறதா? அயர வைத்த வரிகள்!!
//ஒரே ஒரு மீன் // கவிதை மிக அருமை..சுயத்தின் அழகான பதிவு..
அங்கு பின்னூட்டம் இட இயலவில்லை.
ஆதலால் இங்கு.
//புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன//
///சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்//
அப்பா..என்ன வலிமிகுந்த வரிகள்.ஏதார்த்ததின் பதிவும் கூட..
//புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன//
உண்மையை அழகாக கவிதையாக்கியுள்ளீர்
வாழ்த்துக்கள்
என் சுரேஷ்
Post a Comment