Sunday, April 03, 2005

புதிய கவிதைகள்-1

நம்முடைய இரவுகள்
தேம்புகின்றன

நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன

நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.

மனுஷ்ய புத்திரன்

4 comments:

Vaa.Manikandan said...

சற்றே வேறுபட்ட மனுஷ்ய புத்திரன் கவிதையாக இருக்கிறது :)

Anonymous said...

என்ன மனுஷ் சார்...... நீங்களுமா காதலையும்

அது தரவல்ல உபாதைகளையும் பாடிக்கொண்டு.......

அதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் இன்னும் மிக உயரத்தில் பறக்கக்கூடியவர்.

காருண்யன்.

உயிர்மை said...

காதலும் அதன் உபாதைகளும் அவ்வளவு தாழ்ந்ததா? நான் அன்பின் துயரங்களைப் பாடுகிறவன்.
காதலின் தீர்க்கவே முடியாத புதிர்களும் வினோதங்களும் வேட்கையின் அதிசய நிறங்களும்தான் எழுதுவதற்கான இடையறாத அழைப்புகள். இந்தக் கவிதை சரியாக எழுதப்படவில்லை என்று நீங்கள் சொல்லுங்கள். ஆனால் காதலை ஏன் எழுதுகிறாய் என்று சொல்லலாமா? அவச் சொல் அல்லவா அது.

மனுஷ்ய புத்திரன்

Vaa.Manikandan said...

என்ன கவிஞரே!
நீவீர் காதலுக்கு இவ்வளவு பெரிய ஆதரவாளரா?வாழ்க காதல்!