Sunday, February 13, 2005

காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.

4 comments:

Narain Rajagopalan said...

Brilliant!! இதைத் தவிர என்ன சொல்ல, தொடர்ந்து எழுதுங்கள்.

Mookku Sundar said...

ஏயப்பா...

அற்புதம்.

Karunah said...

காமத்துக்கு பலிச்சோறு என்ற உவமானம் உவப்பாகவே இல்லை.
கடவுளையும், குருவையும் பிரீதி செய்ததில் செம்பருத்தியுருண்டு விழுகிறது உன் யோனியில்
என்ற வரிகள் பொருள்மயக்கம் தருபவை. என்னதான் வஞ்சப்புகழ்ச்சி என்றாலும்
A Crudely moulded naked Verse by Kalyanji!

*- காருண்யன் கொன்பூசியஸ் -*