Monday, February 07, 2005

ஓர் அறிமுகம்

ஓர் அறிமுகம்


நண்பர்களேஉயிர்மை வலைப்பதிவில் நான் சார்ந்து வாழும் உலகத்திலிருக்கும் எதைப்பற்றி வேண்டுமானாலும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.இலக்கியம், சமூகம், வாழ்க்கை சார்ந்த எப்பொருள் சார்ந்தும் நீங்கள் உரையாடலாம். உங்கள் மறுமொழிகளை உள்ளிடலாம். uyirmmai@yahoo.co.in என்ற முகவரிக்கு எழுதலாம்.


என்னைப் பற்றி:

மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் நவீன கவிதைகளும் இலக்கிய, சமூக விமர்சனங்கள் எழுதிவருகிறேன்.

எனது நூல்கள்:

கவிதைத் தொகுப்புகள்

மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்(1983)
என் படுக்கையறையில் யாரோஒளிந்திருக்கிறார்கள்(1993)
இடமும் இருப்பும்(1998)
நீராலானது(2001)
மணலின் கதை(2004)

கட்டுரைத் தொகுப்புகள்:

எப்போதும் வாழும் கோடை(2004)
காத்திருந்த வேளையில்(2004)

உயிர்மையைப் பற்றி:

உயிர்மை நவீன இலக்கியம் மற்றும் சிந்தனைகளுக்கான மாத இதழ். 2004 செப்டம்பரிலிருந்து வெளிவருகிறது.

உயிர்மை பதிப்பகம் இதுவரை சுமார் 45 நூல்களை பதிப்பித்திருக்கிறது. சுஜாதா, ஆதவன், ஜெயமோகன், எஸ் .ராமகிருஷ்ணன், எம்.யுவன், வாஸந்தி, காஞ்சனா தாமோதரன், தியடோர் பாஸ்கரன், சு.கி. ஜெயகரன் உள்ளிட்ட பலரது நூல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் உயிர்மையின் நூல்கள் பற்றிய விரிவான தகவல்கள் இவ்வலைப் பதிவில் இடம்பெறும்.

12 comments:

இளங்கோ-டிசே said...

Welcome to the blogs :)

இராதாகிருஷ்ணன் said...

நல்வரவு! தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வலைப்பதிவுகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயம்; மகிழ்ச்சியளிக்கிறது.

PKS said...

Anbulla Manushya Puthiran,

Vanakam. Nalamaa?

Welcome to the Tamil Blog World. Goodluck and all the very best.

Looking forward to read more of your writings in the blog. I was thinking (I may be wrong) that after you starting Uyirmmai, you have not written like you used to do, becos Uyirmmai takes most of your time. I hope and wish to read more of your writings in your blog.

Thanks and regards, PK Sivakumar

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர் மனுஷ்யபுத்திரன்,

வலைப்பதிவில் காலடி வைத்ததற்கு நல்வரவு.

உங்களைப் போன்ற, ஸ்தாபித்துக் கொண்ட எழுத்தாளர்கள் இணையத்தில் நுழைந்தது குறித்து மகிழ்ச்சி.

இத்தளத்தை உங்களின் வியாபாரத்திற்கு துணையான விளம்பரத் தளமாக ஆக்கிக் கொள்ள முயலாமல் இலக்கியம் தொடர்பான பதிவுகளால் அலங்கரிப்பீர்கள் என நம்புகிறேன்.

சுரேஷ் கண்ணன்

இப்னு ஹம்துன் said...

அன்புள்ள மனுஷ்யப்புத்திரன்

உங்கள் வலைப்பதிவு கன்டேன். வாழ்த்துக்கள்.
நவீன கவிதைகளுக்கு முன்னோடி நீங்கள்.
என்னுடைய வலைப்பதிவும் தமிழ்மன்றத்தில் இனைத்திருக்கிறேன். 'எழுத்தோவியங்கள்'.
உங்ளைப்போன்றவர்கள் கருத்து சொன்னால் மகிழ்வேன்

era.murukan said...
This comment has been removed by a blog administrator.
era.murukan said...

அன்புள்ள மனுஷ்யபுத்ரன்,

உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள்.

வலை பதிவதை இத்தனை நாள் ஒத்திப் போட்டுக்கொண்டே இருந்தேன் .... உங்கள் வ்லைப்பதிவில் அனானிமஸ் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், நானும் கணக்குத் திறந்து விட்டேன் :-)

அன்புடன்
இரா.முருகன்

Chandravathanaa said...

வணக்கம் மனுஸ்யபுத்திரன்

உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி

நட்புடன்
சந்திரவதனா

சனியன் said...

வருக வருக என வலைப்பதிவு உலகத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்களைப்போன்ற நல்ல எழுத்தாளர்களின் வரவு எங்களுக்கு இன்னும் ஊக்கமளிக்கும் விஷயமாகும்.

மனித மனத்தின் அடி ஆழத்தில் குவிந்திருக்கும் உணர்ச்சிகளின் உந்துதல்களை உங்களின் கவிதைகள் மூலமே நான் கண்டு கொண்டேன். உங்களிடமிருந்து பல்வேறு படைப்புகளையும் விமர்சனங்களையும் இங்கு எதிர்பார்க்கிறோம்.

வரவேற்று மகிழும்,
சனியன் சூர்யா

அன்பு said...

வணக்கம், வருக திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களே.

உங்களின் இந்த வலைப்பதிவால் இரட்டிப்பு சந்தோஷம். உங்களைப்போன்றவர்களை இங்கு பார்ப்பது முதலில் & திரு. இரா.முருகன் அவர்களை கணக்கு திறக்கவைத்து அதிலும் தமிழில் எழுதவைத்தது இரண்டாவது மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்.

ஈழநாதன்(Eelanathan) said...

வருக வருக

Vaa.Manikandan said...

வலைப்பதிவில் மட்டும் இல்லாது,உயிர்மை குறித்த செய்திகளை இணையத்திலும் கொணர்வீர்கள் என நம்புகிறோம்.
மற்ற வாசகர்களும் இதனை வலியுறுத்துவார்கள் என நினைக்கிறேன்.